பிறப்பிலேயே பெண் சாபம் பெற்ற 7 ராசிகள் என்னென்ன தெரியுமா?

பெண் சாபம் பெற்ற 7 ராசிகள் எவை என்பதை இங்கு பார்க்கலாம்.

பெண் சாபம், மீண்டும் மீண்டும் வாழ்க்கையில் தோல்விகளை கொடுக்கும். இந்த சாபத்தை பெற்றவர்கள் தங்களுடைய வீட்டில் உள்ள பெண்களின் மூலமாக கூட, தொடர்ந்து பிரச்சினைகளை சந்திப்பர்.

பெண் கிரகம் என்று அழைக்கப்படுவது சுக்கிரன். இந்த சுக்கிர பகவான் காமம், இன கவர்ச்சி, படைப்பு சார்ந்த விஷயங்கள் உள்ளிட்டவற்றை  குறிக்கும்.

மேஷ ராசி:

மேஷ ராசிக்கு பெண் சாபம் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

மிதுன ராசி

மிதுன ராசிக்கு 6 -ம் இடம், 10 – இடம், 8 -ம் இடம் ஆகியவற்றில் சுக்கிரன் மறைந்து விட்டார் என்றால், பெண் சாப பாதிப்பு ஏற்படும்.

12ம் இடத்தில் ஆட்சி ஆவார். அது மறைவு ஆகாது. 8ம் பாவமான மகரத்தில் மறைந்து விட்டாலோ, 6 ம் பாவம் (குறிப்பாக விருச்சிகம்), இதில் மறைந்து விட்டால் பெண்களால் மிகப்பெரிய அளவில் பிரச்சினை வரும். இவர்களுக்கு பெண்களிடம் இருந்து வெறுப்பு மட்டுமே கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அதிகமாக காதலித்து திருமணம் செய்து கொள்வதை நாம் பார்க்கிறோம். சிம்மராசியில் பிறந்த ஆண்களுக்கு, பெண்கள் மூலமாக தொல்லைகள் வரும். குறிப்பாக மனைவி மூலமாக தொடர்ந்து பிரச்சினைகள் வரவாய்ப்பு இருக்கிறது.

கன்னிராசி

கன்னிராசியில்தான் சுக்கிர பகவான் நீச்சம் அடைவார். இயல்பாகவே பெண்கள் மூலமாக இவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.

துலாம்.

துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெறுகிறார். ஆனால் துலாமின் 2ம் மற்றும் 7ம் இடங்களுக்கு உரிய பாதகாதிபதியான சுக்கிர பகவான், 10 இடம் என்று சொல்லக்கூடிய கடக ராசியில் நீச்சமாகிறார். ஆக, துலாம் லக்கினம், துலாம் ராசிக்காரகளுக்கு இயற்கையிலேயே பெண் சாபம் இருக்கும்.

கும்பம்

கும்பராசிக்கு ஜென்ம விரோதி சூரியன் என்பதால், மனைவியால் இந்த ராசிக்காரருக்கு பிரச்சினை வந்து கொண்டே இருக்கும்.

மீனம்.

இங்கு சுக்கிரன் உச்சம் பெறுவார். அவர் கன்னியில் நீச்சம் ஆகிவிடுவார். ஆகையால், இவர்களுக்கு முதலில் பெண்களால் நல்ல விஷயங்கள் நடந்தாலும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு அவர்களால் பிரச்சினை ஏற்பட்டே தீரும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *