பிரசவித்த தாய் உயிரிழந்த சோகம்; மருத்துவர்கள் கவனக்குறைவே காரணம் என உறவினர்கள் போராட்டம்!

இந்நிலையில், நீவிதா தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். பச்சிளம் குழந்தையை தவிக்கவிட்டு தாய் இறந்துவிட்டதாகக்கூறி உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் பேராவூரணி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சையில் கவனக்குறைவுடன் செயல்பட்டதே பிரசவித்த தாய் நீவிதா இறப்புக்கு காரணம் என குற்றம் சாட்டினார். இது தொடர்பாக நீவிதா சகோதரர் நவீன்குமார், பேராவூரணி காவல் நிலையத்தில் டாக்டர்கள் மீது புகார் அளித்தார்.

இதையடுத்து நீவிதாவின் உறவினர்கள் பச்சிளம் குழந்தையுடன் வந்து பேராவூரணி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது பெண்கள் பலரும் நெஞ்சில் அடித்து கதறினர். மேலும் கவனக்குறைவாக சிச்சையளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர்.

இது குறித்து நவீன்குமார் கூறினார், “என் சகோதரிக்கு அறுவை சிகிச்சை மூலம்தான் முதல் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாவதாக அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

டாக்டர்கள் மீது குற்றம்சாட்டி போராட்டம்
டாக்டர்கள் மீது குற்றம்சாட்டி போராட்டம்

தாய், சேய் இருவரும் நலமுடன் இருந்ததால் சாதரண வார்டுக்கு மாற்றினர். ஆனால் அதன் பிறகு குளுக்கோஸ் ஏற்றினர். பின்னர் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் கவனக்குறைவாக சிச்சிச்சை அளித்ததே இந்த நிலைக்குக் காரணம். இப்போது இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இறந்து விட்டார் நீவிதா. அதற்கு காரணம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் தான்.

தாய் இல்லாமல் எப்படி குழந்தைகளை ஆளாக்க போறோம் என தெரியவில்லை. நீவிதா குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *