பிக் பாஸ் 6 நாள் 69: குறும்படத்தில் வென்ற விக்ரமன்; ரச்சிதாவால் கண்ணீர் விட்ட ஷிவின்!|bigg boss season 6 day 69 highlights

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

கமலுக்கு சொர்க்கம், நரகம் போன்ற கற்பிதங்களில் நம்பிக்கையிருக்காது என்பது தெரியும். எனவே ‘அவையெல்லாம் நாம் கால்வைக்காத நிலம். பட்டா இல்லாத நிலத்திற்கு காசு கொடுப்பது மாதிரி செய்து கொண்டிருக்கிறோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நரகத்தை, சொர்க்கமாக மாற்றி நம் பிள்ளைகளுக்கு அளித்து விட்டு செல்ல வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டிய செயல். கலை, இலக்கியம், அரசியல் என்று அனைத்துத் துறைகளிலும் மாற்றங்கள் நிகழ வேண்டும்’ என்கிறார் கமல்.

தலைவரான மைனா, மிக்ஸி பரிசளிக்க வேண்டிய நேரம். மணிக்கு நேரிடையாகக் கொடுத்தால் எங்கே ஃபேவரிட்டஸம் என்று சொல்லி விடுகிறார்ளோ?!’ என்று கதிரின் பெயரையும் கூட சேர்த்துக் கொண்டு பிறகு மணிக்கு கொடுத்தார். “மக்கள் கிட்ட போயிட்டு திரும்பத் திரும்ப வர்றதுலதான் பெருமை இருக்கு” ​​என்று சவடாலாகப் பேசிக் கொண்டிருந்தாள் தனலஷ்மி. அவர் சொல்வது ஒருவகையில் உண்மைதான். ஆனால் ஒருவர் தேர்வில் ஃபெயிலாகி திரும்பத் திரும்ப எழுதுவதை பெருமையாக சொல்லித் திரிய முடியாது. தனலஷ்மியின் பேச்சைக் கேட்ட ஏடிகே “சமூகம்னா இவங்களுக்கு ஜோக்கா தெரியுது. ‘டேக் இட் கிரான்ட்டடா எடுத்துக்கறாங்க’.. மக்கள் குனிய வெச்சு முதுகுல குத்தும் போதுதான் தெரியும்” என்றது மிகச்சரி.

பிக் பாஸ் 6 நாள் 69

பிக் பாஸ் 6 நாள் 69

நாமினேஷன் பற்றிய உரையாடலின் போது ‘ஏ.. ராமசாமி.. இங்க வாயேன்.. நம்ம ஷிவின் கொளுத்திப் போட மாட்டாளாமாம்..” என்று ஒவ்வொருவரையும் அழைத்து விசாரித்து ஷிவினை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள் தனலஷ்மி. இந்தக் கிண்டலை ஷிவின் திறமையாக சமாளித்தாலும் அவரது முகம் மாறியதைக் கவனிக்க முடிந்தது. குறிப்பாக ரச்சிதாவும் இதில் இணைந்த போது அவர் கூடுதலாக வருத்தமடைந்தார். பிறகு இரவின் தனிமையில் அவர் கண்கலங்கிக் கொண்டிருந்ததை காமிரா ஓவியம் போல டாப் ஆங்கிளில் காட்டிக் கொண்டிருந்தது. விடிந்ததும் ஷிவினுக்கு முத்தம் தந்து சமாதானப்படுத்தினார் ரச்சிதா.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *