பார்த்திபன் படத்தில் ஸ்ருதி

ஒருவர் மட்டுமே நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’, ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘இரவின் நிழல்’ ஆகிய வித்தியாசமான படங்களை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்து வரும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. எந்த சாதனை முயற்சியும் இல்லாமல் ஒரு இயல்பான படத்தை இயக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இப்படத்துக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரிடம் இசை அமைக்கும்படி கேட்காத அவர், முதல்முறையாக இமான் இசை அமைப்பதாக குறிப்பிட்டார். மற்ற விவரங்கள் எதையும் அவர் அறிவிக்கவில்லை.

இப்படத்துக்காக இமான் இசையில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இதுகுறித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஸ்ருதி என் படத்துக்குப் பாட வந்திருக்கிறார். அதை தாண்டி இன்னொரு விஷயமும் அவர் செய்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். பாடலுடன் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் சிறப்பு வேடம் ஒன்றில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. பார்த்திபன் இயக்கியுள்ள இப்படம், காதல் மற்றும் ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ளது.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *