பார்க்கிங் இயக்குனருக்கு தங்க காப்பு பரிசளித்த ஹீரோ

சென்னை: ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் நடித்த ‘பார்க்கிங்’ படம் கடந்த 1ம் தேதி வெளிவந்தது. ஒரே காம்பவுண்டில் வசிக்கும் இவருக்கு இடையில் கார் பார்க்கிங் தொடர்பாக வரும் மோதலை பற்றிய படம். படம் பரவலான வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் தங்க காப்பு அணிவித்தார்.பின்னர் அவர் பேசியதாவது:

இந்த படத்தின் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இது நிச்சயம் இருக்கும் இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சினிஸ், சுதன் இவர்களுக்கு நன்றி. வெற்றி இயக்குநர் பட்டியலில் ராம் நிச்சயம் இருப்பார். படத்தில் வேலை பார்த்த எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா, பிரார்த்தனா அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி, சந்தோஷத்தையும் தாண்டி பயத்தையும், பொறுப்பையும் கொடுத்துள்ளது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பு கூடியுள்ளது.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *