பள்ளி மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

Free text books and uniform for students: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகளை இலவசமாக அரசே வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
வேலூர் மாவட்டம் புவனேஸ்வரிபேட்டையில் உள்ள தனியார் பள்ளியில், இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவரிடம், சீருடை, பாட புத்தகங்களுக்காக 11,977 ரூபாய் கட்டணம் செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட போது, எந்த கட்டணமும் இல்லாமல் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். ஆனால், மாணவனுக்கு புத்தகங்கள் வழங்கப்படாததால், அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாடப் புத்தகங்களுக்கான கட்டணத்தை அரசே வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் , கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ள நீதிபதி, 2 வாரங்களுக்குள் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு ஆணையிட்டுள்ளார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »