பயந்து ஓட்டம்.. இலங்கை பாதுகாப்பு படையில் 20,000 பேர் நீக்கம்..பொருளாதார நெருக்கடிக்கு நடுவே அதிரடி | 20,000 defence personnel delisted from services in Sri Lankan

சர்வதேச

ஓய்-நந்த குமார் ஆர்

புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, டிசம்பர் 21, 2022, 20:53 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

கொழும்பு: இலங்கையில் பாதுகாப்பு படைகளில் இருந்து பயந்து அல்லது விலகி ஓடியவர்களில் ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அந்தை நாடாக இலங்கை உள்ளது. இந்நிலையில் தான் இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முதலாக கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.

இதனால் உணவு, எரிபொருட்களின் விலைகள் விண்ணைத் தொட்டன. அதோடு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடும் நிலவியது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட துவங்கினர்.

இந்தோனேசியா செல்லும் வழியில் இலங்கை கடலில் தத்தளித்த 104 மியான்மர் நாட்டவர் மீட்பு- 14 நாட்கள் காவல் இந்தோனேசியா செல்லும் வழியில் இலங்கை கடலில் தத்தளித்த 104 மியான்மர் நாட்டவர் மீட்பு- 14 நாட்கள் காவல்

இலங்கையில் புதிய அரசு

இலங்கையில் புதிய அரசு

இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர் தங்களின் பதவிகளை அடுத்தடுத்து ராஜிமானா செய்தனர். தற்போது இலங்கையில் புதிய ஆட்சி நடக்கிறது. அதிபராக ரணில் விக்ரமசிங்கே உள்ளார். இதற்கிடையே இலங்கை அரசு பல்வேறு நாடுகளில் உதவி கேட்டு வருகிறது. இலங்கைக்கு இந்தியா அதிகளவில் உதவி செய்து வருகிறது.

பயந்து ஓடும் வீரர்கள்

பயந்து ஓடும் வீரர்கள்

இலங்கையின் பாதுகாப்பு படைகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பயந்து அல்லது விலகி ஓடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இலங்கை உள்நாட்டு போர் காலத்தில் இது தொடர் கதையாக உள்ளது. அதன்படி நீண்டகாலமாக பணிக்கு திரும்பாத முப்படைகளை சேர்ந்த வீரர்கள் மீது அந்நாட்டில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது. இந்த பொதுமன்னிப்பு காலத்தில் வீரர்கள் பணிக்கு சேரவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் பலரும் அதனை ஏற்கவில்லை.

20 ஆயிரம் பேர் அதிரடி நீக்கம்

20 ஆயிரம் பேர் அதிரடி நீக்கம்

இந்நிலையில் தான் இலங்கையில் முப்படை வீரர்கள் ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். மேலும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கேணல் நளின் ஹேரத் நேற்று கூறினார், ‛‛தற்போது வரை 19,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர்” என்றார். தற்போது தான் இன்று மேலும் சிலர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 19,405 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி தற்போது ராணுவத்தைச் சேர்ந்த 17,222 பேர், கடற்படையைச் சேர்ந்த 1,145 பேர், விமானப்படையைச் சேர்ந்த 1,038 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

செலவு குறைய வாய்ப்பு

செலவு குறைய வாய்ப்பு

இலங்கையை பொறுத்தமட்டில் முப்படைகளையும் சேர்த்து 2 லட்சம் பேர் பணியாற்றினர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் 20 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு 539 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலங்கை ராணுவத்தை பொறுத்தமட்டில் ஓய்வூதியம் பெற வேண்டுமானால் 22 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். தற்போது தான் தற்போது 20 ஆயிரம் பேர் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது இலங்கையில் செலவினத்தை கொஞ்சம் குறைக்கும் என நம்பப்படுகிறது.

மாற்று பணியில் அமர்த்திய அரசு

மாற்று பணியில் அமர்த்திய அரசு

முன்னதாக இலங்கையில் உள்நாட்டு போர் என்பது 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. போருக்காக ஏராளமானவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் போருக்கு பிறகு பிற பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டனர். அதன்படி நகர கட்டமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். உள்நாட்டு போர் காலம் மற்றும் போருக்கு பிந்தைய காலத்தில் ஏராளமானவர்கள் ஓடியும், சிலர் வெளிநாடுகளில் தஞ்சமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆங்கில சுருக்கம்

இலங்கையில், இலங்கைப் படைகளை விட்டு வெளியேறிய சுமார் 20,000 பாதுகாப்புப் பணியாளர்கள் பொது மன்னிப்பின் ஒரு பகுதியாக அவர்களின் சேவைகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளனர்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *