‛நோ’ டேட்டா.. கொரோனா பரவலுக்கு நடுவே.. உலக சுகாதார நிறுவனத்துக்கே விபூதி அடிக்கும் சீனா.. ஏன்? |

வெளியிடப்பட்டது: வெள்ளி, டிசம்பர் 23, 2022, 9:52 [IST]

ஜெனீவா: சீனாவில் பாதிப்பால் தினமும் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும், 5 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படும் நிலையில் உலக சுகாதார நிறுவனத்துக்கு அந்த நாடு விபூதி அடித்துள்ளது. இதனால் உலக நாடுகளின் அச்சமடையும் நிலையும் உள்ளது.

2019 இறுதியில் சீனாவில் இருந்து புறப்பட்ட வைரஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் என வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் ஒன்று கூட இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. வைரஸ் உருமாறி தாக்கியால் உலகம் முழுவதும் பல கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கொத்து கொத்தாக மக்கள் பலியாகினர்.

சீனாவில் நோயாளிகள் அதிகரித்ததால் நிரம்பும் மருத்துவமனைகள்சீனாவில் நோயாளிகள் அதிகரித்ததால் நிரம்பும் மருத்துவமனைகள்

மீண்டும் அதிகரிக்கும்

மீண்டும் அதிகரிக்கும்

இருப்பினும் ஒட்டுமொத்த உலகமும் போராடி வைரஸ் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. இந்தியா உட்பட பல நாடுகளில் தடுப்பூசிகளை செலுத்த தொடங்கினர். இதையடுத்து கடந்த ஓராண்டாக பாதிப்பு என்பது படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது தான் தற்போது சில நாடுகளில் பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கி அதிர்ச்சியளித்துள்ளது.

சீனாவில் பாதிப்பு ஏன்?

சீனாவில் பாதிப்பு ஏன்?

அதன்படி சீனா, அமெரிக்கா, தென்கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீனாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரசால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு மாத்திரை, மருந்துகள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் இடபற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் ஓமிக்ரானின் உருமாறிய பிஎப் 7 வைரஸ் பரவலால் தான் பாதிப்பு அதிகரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் கவலை

உலக சுகாதார நிறுவனம் கவலை

இந்நிலையில் தான் சீனாவின் நிலையை கண்டு உலக சுகாதார நிறுவனம் கவலையடைந்துள்ளது. இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ‛‛உலகில் உற்பத்தி பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. தற்போது சில நாடுகளில் ஏதேனும் பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. சீனாவில் உள்ள நிலைமை கவலையளிக்கிறது. சீனாவின் பாதிப்பு பற்றிய விபரங்களை ஆய்வுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் நாட்டில் தடுப்பு தடுப்பூசி செலுத்த வேண்டும். சிகிச்சை செலுத்துவதில் சீனா கவனம் செலுத்த வேண்டும். சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது” என்றார்.

தகவல்களை மறைக்கும் சீனா

தகவல்களை மறைக்கும் சீனா

இருப்பினும் கூட தற்போது சீனா உலக சுகாதார நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படாமல் உள்ளது. சீனாவில் மறைந்திருக்கும் பாதிப்பு, பலி உள்ளிட்ட விபரங்கள் பிற நாடுகளுக்கு தெரியாமல் வைக்கப்படுகின்றன. சீனாவில் நாட்டின் பாதிப்பு என்பது தற்போது மிக மோசமான அழிவை ஏற்படுத்துவதாக கூறப்படும் நிலையில் அந்த சரியான நிலவரம் என்ன? என்பது பற்றி சீனா நாட்டு அரசாங்கம் இன்று உலக சுகாதார நிறுவனத்திடம் தகவல்கள் வழங்கப்படவில்லை.

2வது வாரமாக ‛நோ' டேட்டா

2வது வாரமாக ‛நோ’ டேட்டா

கடந்த 4ம் தேதி நிலவரப்படி சீனாவில் அன்றைய தினம் பாதிப்பு என்பது 28,859 ஆக அதிகரித்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அதன்பிறகு சீனாவில் அமலில் இருந்த தடுப்புக்கான கடும் கட்டுப்பாடுகள் கடந்த 7 ஆம் தேதி தளர்த்தப்பட்டன. இதனால் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக உலக சுகாதார நிறுவனத்திடம் பாதிப்பு பற்றிய விபரங்களை சீனா வழங்கவில்லை. இதனால் இந்த வாரத்துக்கான பாதிப்பு தொடர்பான நாடுகளின் பட்டியலில் சீனாவின் விபரங்கள் இடம்பெறவில்லை. தற்போது 2வது வாரமாக இந்த விபரத்தை சீனா வெளியிடாமல் மறைத்துள்ளது.

தொடர்ந்து மறைப்பு

தொடர்ந்து மறைப்பு

மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஷ் சார்பில் ஜெனிவாவில் சீன தூதரக அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டு அவர்கள் எந்த பதிலும் வழங்கவில்லை. இதனால் சீனா தொடர்ந்து தொடர்கிறது. சீனாவை பொறுத்தமட்டில் பரவல் தொடங்கியது முதல் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது. சீனாவின் வூஹான் மார்க்கெட்டில் இருந்து பரவிய நிலையில் அதனை சீனா மறைத்ததாக முதல் புகார் கூறப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து சீனா தனது நாட்டின் பாதிப்பு, பலி உள்ளிட்ட விபரங்களை வெளியிடாமல் மறைத்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது சீனாவில் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அதுபற்றிய விபரங்களை அந்நாட்டு அரசு மறைக்க தொடங்கி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுகாதார நிறுவனம் ஆதரவு

சுகாதார நிறுவனம் ஆதரவு

இருப்பினும் கூட உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலை பிரிவின் தலைவர் மைக் ரியான் கூறினார், ‛‛சீனாவில் என்ன நடக்கிறது என்பது பற்றி அந்த அரசு சார்பில் தெரிவிக்கப்படவில்லை என நான் கூறமாட்டேன். ஒருவேளை அவர்கள் மிகக்கடினமான பிரச்சனையை எதிர்கொள்ளலாம். கணக்கீடு செய்வதில் அவர்களின் பிரச்சனையை சந்திக்கலாம்” என அந்நாட்டுக்கு ஆதரவாக கூறியுள்ளார். இருப்பினும் கூட சீனாவின் தரவுகளை உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கினால் அதுபற்றிய முன்னெச்சரிக்கைகளை பிற நாடுகள் எடுக்க ஏதுவாக இருக்கும். ஆனால் சீனா எந்த விபரங்களையும் வெளியிடாமல் இருப்பது உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

  தினமும் 10 லட்சம் பேர் பாதிப்பு என தகவல்

தினமும் 10 லட்சம் பேர் பாதிப்பு என தகவல்

சீனாவில் பாதிப்பு தொடர்பான விபரங்கள் அந்நாட்டின் சார்பில் வெளியிடப்படாமல் இருந்தாலும் கூட அங்கு தினமும் 10 லட்சம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தினசரி 5,000 பேர் வரைவால் உயிரிழப்பதாக சொல்லப்படுகிறது. சீனாவின் மர்மதேசமாக உள்ளதால் அங்கிருந்து அதிரப்பூர்வ தகவல் வெளியாகாமல் மறைக்கப்படும் நிலையில் சுகாதார நிபுணர்கள், சர்வதேச பத்திரிகைகள் சீனாவின் நிலையை கண்டறிந்து இந்த தகவலை கூறியுள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *