நெடுஞ்சாலைத்துறையில் வளர்க்கப்படும்16,000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கல்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் 16 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கின்றனர். இவற்றை கிராமப்புறங்களில் ரோட்டோரம், கண்மாய்களில் நடுவதற்கு இலவசமாக வழங்குகின்றனர்.

ராமநாதபுரத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சந்திரன், உதவி கோட்டப்பொறியாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் மேற்பார்வையில் அலுவலக வளாகத்தில் புங்கன், வேம்பு, அரச மரம் உள்ளிட்ட பல்வேறு நிழல்தரும் 16 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கின்றனர்.

இவற்றை கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவில் கிராமங்களில் ரோட்டோரம், கண்மாய் பகுதிகளில் நடுவதற்கு ஊராட்சி ஒன்றிய பி.டி.ஒ.,க்கள் வழியாக இலவசமாக வழங்குகின்றனர். இதன்படி ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய கிராமங்களுக்கு சாலைப் பணியாளர்களை பயன்படுத்தி லாரிகளில்9000 மரக்கன்றுகள் அனுப்பும் பணி நடந்தது.

தொடர்ந்து கேட்கும் ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகளைவழங்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *