நில்வலா ஆற்றுப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது

2023 ஒக்டோபர் 23 ஆம் திகதி நில்வலா ஆற்றுப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, குறித்த ‘ஆம்பர்’ அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கொட்டாபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, பஸ்கொட, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள நில்வலா ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளுக்கு ஒக்டோபர் 23 ஆம் திகதி நீர்ப்பாசனத் திணைக்களம் ‘ஆம்பர்’ வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே இப்பிரதேசங்களில் வசிப்பவர்களும் அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இது தொடர்பில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *