`நிலத்தில் தங்குவதை விட குறைவாகவே செலவாகிறது’… கப்பலில் தங்க அனைத்தையும் விற்ற தம்பதியினர்!

இதுவரையில் இவர்கள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் தென் பசிபிக் பகுதிகளுக்குப் பயணம் செய்துள்ளனர். `நிலத்தில் வாழ்வதை விட, இந்த வாழ்க்கைக்கான செலவு மலிவானதாக உள்ளது” எனக் கூறியுள்ளனர். 

இப்போது இவர்களிடம் டெலிபோன் பில், ஷிப்பிங் பில், கிரெடிட் கார்டு பில் மட்டுமே இருக்கின்றன. வீடும் இல்லை, வீட்டிற்கான செலவும் இல்லை. வாகனமும் இல்லை, அதற்கான இன்ஷூரன்ஸும் இல்லை. இதனால் நிலப்பரப்பில் தங்கியிருந்ததை விட பாதியளவே செலவாகிறதாம். 

டிசம்பர் 2024 வரையில் இவர்கள் தங்களின் பயணங்களுக்கான முன்பதிவைச் செய்துள்ளனர்.

அதன்பின்னர், `Villa Vie’ என்ற தங்கி பயணம் செய்யும் (Residential cruise ship) கப்பலில் நிரந்தரமாக ஒரு கேபினை வாங்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் பயண கப்பல் அடுத்த ஆண்டு மே மாதம் சவுத்தாம்ப்டனில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் தன் பயணிகளில் 30 சதவிகிதத்தினருக்கு நிரந்தமாக கப்பலில் தங்குவதற்கான அனுமதியை வழங்குகிறது. 

`கப்பலில் நாங்கள் ஒரு கேபினை வாங்க முடிவு செய்துள்ளோம், அதன்பின்னர் அதை எங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைப்போம். 15 வருடங்கள் வரை, கப்பலில் இது எங்களுக்கு வீடாக இருக்கப் போகிறது. நாங்கள்  இருவரும் படகோட்டிகள். நாங்கள் கடலில் இருப்பதை விரும்புகிறோம்’  என்று மெலடி ஹென்னெஸி கூறியுள்ளார். 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *