நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

நாடளாவிய ரீதியில் இன்று (17) காலை ஆரம்பிக்கப்பட்ட விசேட பொலிஸ் நடவடிக்கைகளில் இதுவரை 83 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதில் போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 45 சந்தேக நபர்களும் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகத்தை ஒழிக்கும் நோக்கில் இலங்கை பொலிஸார் இன்று முதல் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *