நாக்குல இன்னும் ஏழரை போகல.. பிரபல இயக்குநரையே டென்ஷன் ஆக்கிய காமெடி நடிகர்.. என்ன ஆச்சு தெரியுமா? | Popular Director gets angry on famous comedian bad behaviour in shooting spot

ஃபீல்டு அவுட்

ஃபீல்டு அவுட்

தடை விதிப்பதற்கு முன்பாகவே அந்த காமெடி நடிகரின் படங்கள் எல்லாம் கொஞ்சமும் சிரிப்பை ஏற்படுத்தாத அளவுக்கு படு மொக்கையாக மாறின. அதன் பிறகு அவருக்கு ஏறிய தலைகனம் தான் அந்த பார்ட் 2 படத்தையே பண்ண முடியாமல் போனது. ஒட்டுமொத்தமாக ஃபீல்ட் அவுட் ஆனாலும் இன்னும் அவருக்கு செருக்கு சற்றும் குறையவில்லை என்பதை ஒட்டுமொத்த யூனிட்டே உணர்ந்த தருணம் சமீபத்தில் நடந்துள்ளது தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீண் செலவு

வீண் செலவு

நடிகரை நம்பி அந்த பெரிய நிறுவனம் படங்களை தயாரித்து வரும் நிலையில், உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்வது போல தேவையில்லாமல் பல வீண் செலவுகளை இழுத்து விட்டு வருகிறாராம். வம்பு நடிகர் எல்லாம் மீண்டும் வந்த போது பழசை எல்லாம் மறந்து விட்டு புதிய மனிதராக நடித்து வரும் நிலையில், இந்த காமெடி நடிகரிடம் ஒரு சின்ன மாற்றம் கூட ஏற்படவில்லை.

கவனமே இல்லை

கவனமே இல்லை

அந்த பார்ட் 2 படத்தில் மீண்டும் காமெடி நடிகராக நடித்து வரும் அவருக்கும் இயக்குநருக்கும் சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே முட்டிக் கொண்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. காமெடி காட்சி ஒன்றை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கொஞ்சம் கூட அந்த நடிகரின் கவனம் இங்கே இல்லாமல், அவருடைய இன்னொரு படத்திலேயே சென்று விட்டதால் இயக்குநர் ரொம்பவே டென்ஷன் ஆகி விட்டாராம்.

ரொம்ப அடம்

ரொம்ப அடம்

அந்த காமெடி காட்சியை முடிக்காமல், நான் அந்த படத்துக்கு ஷூட்டிங் போகணும் என திடீரென காமெடி நடிகர் அடம் பிடித்தது அந்த பிரபல இயக்குனர் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டதாம். நீ மட்டும் இப்போ இந்த செட்டை விட்டுப் போனால் அந்த காட்சியையே கட் பண்ணிடுவேன் என இயக்குநர் மிரட்டியும் காமெடி நடிகர் செவி சாய்க்காமல் தனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாராம்.

நாக்குல ஏழரை

நாக்குல ஏழரை

காமெடி நடிகர் அங்கிருந்து கிளம்பிச் சென்ற நிலையில், அந்த காமெடி காட்சியே மொத்தமாக படத்தில் இருந்து பிரபல இயக்குநர் கோபத்தின் காரணமாக தூக்கி விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 நாட்கள் கஷ்டப்பட்டு எடுத்த காமெடி காட்சியை இந்த ஒரு நாள் நடிகர் அமைதியாக நடித்து கொடுத்திருந்தால் கம்பளீட்டே ஆகியிருக்கும் அப்படியொரு நிலைமையில் இப்படி ஆகிடுச்சே அவருக்கு இன்னும் நாக்குல ஏழரை போகல என பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *