நவம்பர் மாத ராசி பலன் 2023: காணும் இடமெங்கும் கண்ணி வெடி.. சோதனைகளை வெல்லும் ராசிக்காரர்கள் யார்?

சென்னை: நவம்பர் மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் நீச்ச நிலையில் பயணம் செய்கிறார் கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சம் பெற்ற நிலையில் கேது உடன் இணைந்துள்ளார். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்திருக்கிறார். ராகு கேது பெயர்ச்சியும் நிகழ்ந்திருக்கிறது. குருவும் வலிமையான நிலையில் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் பயணம் பார்வையால் கும்பம், மீன ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கும்பம்: ஜென்ம சனியால் மன உளைச்சல், அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் ராகு கேது சாதகமாகவே உள்ளது. குடும்ப ராகு சின்ன சின்ன சிக்கல்களை குடும்பத்தில் ஏற்படுத்துவார் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது வாக்கு கொடுக்காதீர்கள் நிறைவேற்ற முடியாமல் சங்கடப்படுவீர்கள். எத்தனையோ எதிர்ப்புகளை கடந்து வந்திருப்பீர்கள் இனி பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்தால் எத்தனை பிரச்சினைகளையும் எளிதாக சமாளித்து விடலாம். பொருளாதார நிலை சுமாராகவே உள்ளது. பண விசயங்களில் கவனம் தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம்.

ஆரோக்கியத்தில் கவனம்: எட்டாம் வீட்டில் கேது உடன் சுக்கிரன் இந்த மாதம் நீச்ச நிலையில் இருப்பதால் உணவு விசயத்தில் கவனம் தேவை. பெரிய அளவில் புதிதாக தொழில் தொடங்க வேண்டாம். இனியும் கடன் வாங்காதீர்கள் திருப்பி தருவதில் சிக்கல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வேலையை விட வேண்டாம். இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் சிக்கல் உங்களுக்குத்தான். பயணங்களை தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் வேகமாக செல்ல வேண்டாம் காணும் இடமெங்கும் கண்ணி வெடிகளாக இருப்பதால் நிதானமாக செல்வது நல்லது. நவம்பர் மாதத்தில் நல்லது நடக்க விநாயகரை வழிபடுவது அவசியம்.

மீனம்: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு ராசியில் ராகு பயணம் செய்கிறார். ஏழாம் வீட்டில் சுக்கிரன், கேது, இரண்டாம் வீட்டில் குரு, எட்டாம் வீட்டில் சூரியன், புதன், செவ்வாய், 12ஆம் வீட்டில் சனி என இந்த மாதம் கிரகங்கள் பயணம் செய்கின்றன. கிரகங்கள் சுத்தலில் விடப்போகின்றன. குடும்ப குரு கொஞ்சம் காப்பாற்றுவார். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. எதிர்பார்க்காத சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் நடைபெறும். சுப காரியங்கள் நடைபெறுவது தடைகள் ஏற்பட்டாலும் மாத பிற்பகுதியில் வெற்றிகரமாக நிறைவேறும்.

சோதனை காலம்: சவால்களை சமாளிப்பீர்கள். பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். தொட்டது துலங்கப்போகிறது. பெண்களுக்கு மன உளைச்சல் இருந்தாலும் உற்சாகமாகவே இருப்பீர்கள். சோதனைகள் வந்தாலும் சாதனைகள் செய்வீர்கள். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாத பிற்பகுதியில் செவ்வாய் சூரியன் ஒன்பதாம் வீட்டிற்கு நகர்வது சிறப்பு என்றாலும் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம். யாரை நம்பியும் பணத்தை கடனாக தர வேண்டாம். இந்த மாதத்தில் குல தெய்வ வழிபாடு செய்வது உடல் பலத்தையும் மன பலத்தையும் அதிகரிக்கும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *