நம்மை சுற்றி கட்டமைக்கும் கதைகள்: பிரகாஷ் ராஜ் பேச்சு

சென்னை: கேரளா சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரகாஷ் ராஜ் பேசியது: நம்மை சுற்றி என்ன வகையான கதைகள் கட்டமைக்கப்படுகின்றன என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய 6 இளைஞர்களைச் சுற்றி இப்போது ஒரு கதை கட்டமைக்கப்படுகிறது. ஒரு இளைஞரின் புகைப்படத்துடன் எதிர்க்கட்சி சிக்கியுள்ளது என ஆளுங்கட்சி சொல்லும் கதை. ஆளுங்கட்சியை பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டும் எதிர்க்கட்சியின் கதை.

இது இல்லாமல் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து மற்றொரு கதை. அந்த இளைஞர்களை இதைச் செய்ய தூண்டியது எது என்ற கதை கூட வரலாம். அதே சமயம் வேலையின்மையால் நாட்டின் இளைஞர்கள் எவ்வளவு அவநம்பிக்கையில் உள்ளனர் என்பதை விவாதிக்கும் ஒரு கதை இருக்குமா? மணிப்பூர் தொடர்பாக பதில் கிடைக்காமல் இருப்பது எவ்வளவு வெறுப்பாக இருக்கிறது என்பதற்கான உரையாடலும் இருக்குமா என்பதையெல்லாம் நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு பிரகாஷ் ராஜ் பேசினார்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *