தொடர்ச்சியாக 5வது வெற்றி யாருக்கு? இந்தியா – நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

தர்மசாலா: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில், இதுவரை தோல்வியை சந்திக்காமல் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கும் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதுன்றன. இந்திய அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேச அணிகளை வீழ்த்தியுள்ளது. நியூசிலாந்து அணியுடம் தொடர்ச்சியாக இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை வென்றுள்ளது. இரு அணிகளும் தலா 8 புள்ளிகள் பெற்றிருக்கும் நிலையில், ரன் ரேட் அடிப்படையில் நியூசி. முதலிடம் வகிக்கிறது.

இந்த நிலையில், பலம் வாய்ந்த இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் பரபரப்பான லீக் ஆட்டம், இமாச்சல் கிரிக்கெட் சங்கள் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கலாம் என்பதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் கேப்டன் கேன் வில்லியம்சன் இன்று விளையாடுவார் என நியூசி. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வில்லியம்சன் இல்லாவிட்டாலும் டாம் லாதம் அணியை நேர்த்தியாக வழி நடத்தி வெற்றியையும் வசப்படுத்தி வருகிறார்.

ரோகித் தலைமையிலான இந்திய அணியில் அவர் உட்பட கோஹ்லி, ராகுல் என அனுபவ வீரர்கள் நல்ல பார்மில் இருப்பது பலம். கில், ஸ்ரேயாஸ் ஆகியோரும் சிறப்பாக ஆட ஆரம்பித்திருப்பதால், இந்தியா மிகுந்த தன்னம்பிக்கையுடன் களமிறங்குகிறது. காயம் காரணமாக அவதிப்படும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ஷமி அல்லது அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். சூரியகுமார் அல்லது இஷான் சேர்க்கப்படவும் வாய்ப்பு உள்ளது. வெற்றி நடையை தொடர இரு அணிகளும் வரிந்துகட்டுவதால், ரசிகர்களுக்கு சரியான விருந்து காத்திருக்கிறது.

* சர்வதேச போட்டிகளில் இரு அணிகளும் 116 முறை மோதியுள்ளதில், இந்தியா 58 – 50 என முன்னிலை வகிக்கிறது (ஒரு ‘டை’, 7 ஆட்டம் ரத்து).

* சொந்த மண்ணில் விளையாடிய 37 ஆட்டங்களில் இந்தியா 29-8 என முன்னிலை வகிக்கிறது.

* கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டிகளில் 3ல் இந்தியா வென்றுள்ளது (2 ஆட்டம் ரத்து).

* உலக கோப்பையில் 9 முறை மோதியதில் நியூசி. 5-3 என முந்தியிருக்கிறது (ஒரு ஆட்டம் ரத்து).

* தர்மசாலாவில் இதுவரை நடந்த 7 ஒருநாள் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி 3 போட்டியிலும், சேஸ் செய்த அணி 4லும் வென்றுள்ளன.

* இங்கு இதுவரை 4 முறை விளையாடி உள்ள இந்தியா 2 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ளது.

* தர்மசாலாவில் நியூசி. விளையாடிய ஒரு ஆட்டத்தில் இந்தியாவிடம் சரணடைந்துள்ளது.

* இந்தியா: ரோகித் (கேப்டன்) கேஎல் ராகுல், இஷான் (கீப்பர்கள்), ஆர்.அஷ்வின், ஹர்திக் (காயம்), கோஹ்லி, ஷ்ரேயாஸ், கில், சூரியகுமார், ஜடேஜா, பும்ரா, ஷமி, சிராஜ், ஷர்துல், குல்தீப்.

* நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம், கான்வே, பிலிப்ஸ், வில்லியம் யங், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டிரென்ட் போல்ட், லோக்கி பெர்குசன், மாட் ஹென்றி, ஈஷ் சோதி, டிம் சவுத்தீ.

ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *