தெய்வங்களாய் மாறிய முளைப்பாரிகள்!!!

புரட்டாசி பொங்கல் திருவிழாவில் கருப்பசாமி, மாரியம்மன் வடிவங்களில் முளைப்பாரிகள் எடுத்து வரப்பட்டது பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா ஈஞ்சார் கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற வெயிலுகந்தம்மன் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா ஈஞ்சார் மற்றும் அதனை சுற்றியுள்ள 18 பட்டி மக்களால் சீரும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் திருவிழா ஈஞ்சார், நடுவபட்டி, நாகலாபுரம் உட்பட 18 பட்டி மக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் பதினெட்டு பட்டி மக்களும் அம்மனுக்கு தேவையான பூஜை பொருட்களை தனித்தனியாக மேலதாளம் முழங்க எடுத்து வர இளைஞர்கள் ஆரவாரம் செய்ய ஊரே விழாக்கோலத்தோடு காணப்பட்டது.

முளைப்பாரிகள்:
பொதுவாக அம்மன் கோவில் திருவிழா என்றால் தென்மாவட்டங்களில் முளைப்பாரி இல்லாமல் இருக்காது. தென் மாவட்டங்களில் நடக்கும் ஒவ்வொரு அம்மன் கோவில் திருவிழாவிலும் முளைப்பாரி தவறாமல் இடம்பிடித்து வரும் நிலையில், இந்த திருவிழாவில் கருப்பசாமி, மாரியம்மன், காளியம்மன், விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை போன்ற தெய்வங்களின் வடிவங்களில் முளைப்பாரிகள் வளர்த்து கொண்டு வரப்பட்டது பக்தர்களின் கவனத்தை பெற்றது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *