தீவுத்திடலில் வைக்கப்பட உள்ள விஜயகாந்த் உடல்… இறுதி ஊர்வலம் எப்போது? – முழு விவரம்

Vijayakanth Funeral March: தேமுதிக தலைமை கழகம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில்,”தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று (டிச.28) காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை (டிச. 29) வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறுதி ஊர்வலம் தீவுத்திடல் இருந்து மதியம் 1 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்திற்கு விஜய்காந்தின் உடல் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏன் இடமாற்றம்?

விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் காலமானார் என தேமுதிக தெரிவித்துள்ளது. மேலும், நுரையீரல் அழற்சி காரணமாக அவர் உயிரிழந்தார் என மியாட் மருத்துவமனை உறுதிசெய்துள்ளது. தொடர்ந்து அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் சிறிது நேரத்திலேயே அங்கிருந்து அவரது உடல், கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

தொடர்ந்து, அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்களும், பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தேமுதிக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. அடுத்த 15 நாள்களுக்கு தேமுதிக கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் கூட்டம் அதிகமாகி உள்ளதை அடுத்து, கோயம்பேடு அலுவலகம் நெருக்கடி மிகுந்த இடம் என்பதாலும், இடத்தை தீவுத்திடலுக்கு மாற்றி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாளை நல்லடக்கம்

நடிகர் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அங்கு அவர் குறித்துவைக்கப்பட்டுள்ள இடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து நேரடியாக பார்க்கும் வகையில், அலுவலக வாயிலில் நுழைந்தவுடன் பார்வையில் படும் வகையிலும் இந்த நினைவிடம் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

தேமுதிக அலுவலகத்தில் உள்ள ராட்சத் கட்சிக் கொடியின் கீழ் நாளை அவரது இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு, குறித்துவைக்கப்பட்ட இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜேசிபி இயந்திரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *