“திருமணம் குறித்து நினைத்தாலே பயமாக இருக்கிறது!”- பாடகி வைக்கம் விஜயலட்சுமி

அதில் பேசிய வைக்கம் விஜயலட்சுமி, “என்னைத் திருமணம் செய்த நபர் சேடிஸ்ட் என்பது போகப்போகத்தான் தெரியவந்தது. எப்போதுமே என்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டுவதை முழுப் பணியாக வைத்திருந்தார். என்னை மட்டுமே நம்பியிருந்தேன் என் பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தார். எனது பாடல் தொழிலை மேற்கொள்வதற்குப் பல நிபந்தனைகளை விதித்தார். இசைக்கு தருபவள். அதனால் சந்தோஷத்தையும் தொலைத்துவிட்டு, பாடல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நடத்த நான் விரும்பினேன். அதனால் அவரைப் பிரிந்துவிட்டேன்” எனக்கூறியவர், “உங்களுக்குப் பல்வலி என்றால் அதைப் பொறுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

  வைக்கம் விஜயலட்சுமி
வைக்கம் விஜயலட்சுமி

இந்த வெளிப்பாடு குறித்து வைக்கம் விஜயலட்சுமியிடம் பேசினேன். “எனது திருமண வாழ்க்கையில் நான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து மலையாள ஊடகங்களில் பேசியிருக்கிறேன். கெளதமி மேடம் கேட்டதால் அதை நான் கூறினேன். என்னைத் திருமணம் செய்தவர் திருமணத்துக்கு முன்பு அடிக்கடி இங்கு வருவார், அடிக்கடி பேசுவார். திருமணத்துக்குப் பிறகு அவர் என்னைத் தேவையில்லாமல் ஓ கண்ட்ரோல் செய்தார். அதிக டார்ச்சர் செய்ததால்தான் அவரைப்பற்றிச் சொல்லும்போது பல் வலி குறித்து மேற்கோள் காட்டிப் பேசியிருந்தேன்.அவருடன் நான் ஆறு மாதம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தேன்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *