திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – டிசம்பர் 25 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!

உலகப்பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சர்வ தரிசனம், ஆர்ஜித சேவா, VIP பிரேக் தரிசனம், சுப்ரபாத தரிசனம், திவ்ய தரிசனம் போன்ற பலவகை தரிசன டிக்கெட்டுகள் உண்டு. அவற்றில் மார்ச் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகின்றன. அவற்றை எப்படி சுலபமாக புக் செய்வது என்று பார்ப்போம்!

சுலபமாக சுவாமி தரிசனம் செய்ய உதவும் சிறப்பு தரிசன டிக்கெட்

அனைவருக்குமே திருப்பதி செல்ல வேண்டும் என்ற எண்ணமுண்டு. ஆனால் சர்வ தர்ஷனில் அவர்கள் நம்மை குடவுனில் மணி கணக்கில் காத்திருக்க வைக்கிறார்கள். அவர்களும் கூட்டம் கூட்டமாக மக்கள் திருமலையை நோக்கி படையெடுக்கும் அவர்களுக்கும் வேறு வழியில்லை அல்லவா? ஆனால் இதில் சிக்கி கொள்ளாமல் சுவாமி தரிசனம் செய்ய நமக்கு வேறு வழி உள்ளது. அது தான் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட். இதனை புக் செய்தால் போதும், அதிக நேரம் காத்திருக்காமல் சில மணி நேரங்களில் சுவாமி தரிசனம் செய்யலாம்.

tirupati booking

மார்ச் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதிக்கு மேல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ரூ. 300 சிறப்பு தரிசனதிற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி நவம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்படும். ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுடன் ஒரு லட்டு இலவச பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் புக் செய்வது எப்படி

1. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) அதிகாரப்பூர்வ இணையதளமான tirupatibalaji.ap.gov.in. பார்வையிடவும்.

2. புக்கிங் டிசம்பர் 25 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும், ஆகவே நீங்கள் ஒரு 5 நிமிடங்களுக்கு முன்னரே உங்கள் நல்ல இன்டர்நெட் கனெக்ஷன் உள்ள போன், கணினி, லேப்டாப் தயாராக வைத்துக் கொள்ளவும்.

3. மெய்நிகர் வரிசையில் காத்திருங்கள். டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்ய முயற்சிக்கும் பக்தர்களைப் பொறுத்து, காத்திருக்கும் நேரம் பொதுவாக 5-6 நிமிடங்கள் ஆகும்.

4. மொபைல் எண் போன்ற தேவையான உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிட்டு, கேப்ட்சா குறியீட்டை நிரப்பி, ‘Generate OTP’ என்பதைக் கிளிக் செய்யவும். செல்லுபடியாகும் 6 இலக்க OTP ஐ உள்ளிட்டு, ‘உள்நுழை’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.

5. நீங்கள் பார்வையிட விரும்பும் தேதிகளைத் தேர்ந்தெடுக்கக்கூடிய காலெண்டர் காண்பிக்கப்படும். தேதியைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் தரிசனம் செய்ய விரும்பும் நேரத்தை எடுக்க வேண்டும்.

6. அதில் பச்சை நிறம் காலியாக இருப்பதையும், சிகப்பு நேரம் புக்கிங் முடிந்து விட்டதையும் குறிக்கும்.

7. பெயர், வயது, பாலினம், புகைப்பட அடையாளச் சான்று, அடையாள அட்டை எண் போன்ற யாத்ரீகர்களைப் பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்து “தொடரவும்” என்பதைக் கிளிக் செய்யவும். உள்ளிடப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாகச் சரிபார்த்து, ஏதேனும் தவறுகள் இருந்தால் திருத்தவும்.

8. பெயர், வயது, பாலினம், புகைப்பட அடையாளச் சான்று, அடையாள அட்டை எண் போன்ற யாத்ரீகர்களைப் பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்து “தொடரவும்” என்பதைக் கிளிக் செய்யவும். உள்ளிடப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாகச் சரிபார்த்து, ஏதேனும் தவறுகள் இருந்தால் திருத்தவும்.

9. தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட மின்னஞ்சல் ஐடி/மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். தரிசனத்திற்கு எடுத்துச் செல்ல டிக்கெட்டின் பிரிண்ட் அவுட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

tirupati ticket bookig

நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய இதர விஷயங்கள்

1. நுழைவு நேரத்தில், அனைத்து யாத்ரீகர்களும் முன்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட அதே அசல் புகைப்பட ஐடியை சமர்ப்பிக்க வேண்டும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சுவாமி தரிசனம் இலவசம்.

2. பக்தர்கள் பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும். ஆண்கள் வேட்டி, சட்டை / குர்தா, பைஜாமா அணியலாம். பெண்கள் சேலை / அரை சேலை / துப்பட்டாவுடன் சுடிதார் அணியலாம்.

3. தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் பக்தர்கள் தங்களின் ரசீது அச்சிடப்பட்ட நகலை கொண்டு வர வேண்டும்.

4. குழு டிக்கெட்டில் உள்ள அனைத்து யாத்ரீகர்களும் தரிசனத்திற்கு ஒன்றாக செல்ல வேண்டும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *