திருச்சியில் உள்ள நட்சத்திர வனம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

திருச்சி
மாவட்டம் ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூர் நடுக்கரை கிராமத்தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கர் பரப்பளவில் இப்பூங்கா அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது.

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் மனதை கவரும் வகையில் வண்ண,வண்ண வண்ணத்துப்பூச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அழகின் சிறப்பாய் விளங்கும் இவ் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மற்றும் ஒரு சிறப்பு இந்த நட்சத்திர வனம். நாம் ஒவ்வொருவரின் ராசி , நட்சத்திரத்திற்கு எந்த மரம் வளர்த்தால் நல்லது என்பதை இங்கு அமைந்துள்ள நட்சத்திர வனம் குறிப்பிடுகிறது.

விளம்பரம்

இங்கு பூசம், அவிட்டம், உத்திராடம், மூலம், ரேவதி, ரோகிணி, மகம், சுவாதி, உத்திரம், விசாகம், மிருகசீரிஷம் உள்ளிட்ட அனைத்து 27 நட்சத்திரங்களுக்கு உரிய பலன் தரும் மரங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

நட்சத்திரங்களும் அதற்குரிய மரங்களும் (27) :

1.அஸ்வினி நட்சத்திரம் – எட்டி மரம்

2.பரணி நட்சத்திரம் – நெல்லி மரம்

3.கார்த்திகை நட்சத்திரம் – அத்தி மரம்

4.ரோகிணி நட்சத்திரம் – நாவல் மரம்

5.மிருகசீரிஷம் நட்சத்திரம் – கருங்காலி மரம்

6.திருவாதிரை நட்சத்திரம் -திப்பிலி மரம்

7.புனர்பூசம் நட்சத்திரம் – மூங்கில் மரம்

8.பூசம் நட்சத்திரம் – அரசம் மரம்

9.ஆயில்யம் நட்சத்திரம் – புன்னை மரம்

10.மகம் நட்சத்திரம் – ஆலம் மரம்

11.பூரம் நட்சத்திரம் – பலா மரம்

12.உத்திரம் நட்சத்திரம் – அத்தி மரம்

13.அஸ்தம் நட்சத்திரம் – அத்தி மரம்

14.சித்திரை நட்சத்திரம் -வில்வம் மரம்

15.சுவாதி நட்சத்திரம் – நீர்மருது மரம்

16.விசாகம் நட்சத்திரம் – விளா மரம்

17.அனுஷம் நட்சத்திரம் – மகிழம் மரம்

18.கேட்டை நட்சத்திரம் – பிராய் மரம்

19.மூலம் நட்சத்திரம் – மராமரம் மரம்

20.பூராடம் நட்சத்திரம் – வஞ்சி மரம்

21.உத்திராடம் நட்சத்திரம் – பலா மரம்

22.திருவோணம்நட்சத்திரம் – எருக்கு மரம்

23.அவிட்டம் நட்சத்திரம் – வன்னி மரம்

24.சதயம் நட்சத்திரம் – கடம்பு மரம்

25.பூரட்டாதி நட்சத்திரம் – தேமா மரம்

26.உத்திரட்டாதி நட்சத்திரம் – வேம்பு மரம்

27.ரேவதி நட்சத்திரம் – இலுப்பை மரம்

பெரும்பாலானோர் இந்த நட்சத்திர வனத்திற்கு தங்கள் நட்சத்திரத்திற்கு எந்த மரம் என்பதை தெரிந்துக் கொள்ள இந்த பூங்காவிற்கு வாருகை தருகின்றனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *