தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று 2,888 மையங்களில்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் பரீட்சை நிலையங்களில் இன்று (ஒக்டோபர் 15) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த வருடம் 337,956 பரீட்சார்த்திகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2,888 நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் பங்குபற்றும் அனைத்து பரீட்சார்த்திகளும் காலை 9.00 மணிக்கு தத்தமது பரீட்சை மண்டபங்களுக்கு வருகை தருமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை, அக்குரஸ்ஸ மற்றும் முலட்டியன கல்வி வலயங்களில் பரீட்சை பரீட்சார்த்திகள் பிரதேச செயலகங்கள் ஊடாக பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி செயலாளர் திரு.ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *