தயங்கிய உச்ச நடிகர்.. தட்டித்தூக்கிய பாஸ் நடிகர்.. கடைசி நேரத்தில் நடந்த பரபர ட்விஸ்ட்!

மகள் பண்ண வேலை

மகள் பண்ண வேலை

எப்படியாவது அப்பாவை இயக்கி பெரிய இயக்குநர் ஆகிவிடலாம் என்கிற திட்டத்தை தீட்டிய மகள் அதிலிருந்து விடாப்பிடியாக இருந்து விட்டார். ஏற்கனவே கஷ்டத்தை அனுபவித்து வரும் மகளுக்கு இந்த ஒரு உதவியை கூட செய்யாமல் சுயநலமாக இருக்க கூடாது என உச்ச நடிகர் நினைத்ததன் விளைவு தான் இப்படியொரு ட்விஸ்ட் நடக்கவே காரணம்.

டபுள் பாக்ஸ் ஆபிஸ்

டபுள் பாக்ஸ் ஆபிஸ்

சமீபத்தில் பல நூறு கோடிகளை சொந்தமாக்கிய பாஸ் நடிகர் மற்றும் அந்த பிரம்மாண்ட இயக்குநர் இருவரும் பல வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளது கோலிவுட்டுக்கு இன்னொரு டபுள் பாக்ஸ் ஆபிஸ் படத்தை கொடுப்பது உறுதி என தெரிகிறது.

சக்சஸ் மீட்டில் சாரி

சக்சஸ் மீட்டில் சாரி

சக்சஸ் மீட்டில் கூட பாஸ் நடிகர் பங்கேற்காமல் உச்ச நடிகர் தான் பங்கேற்று இருந்தார். எப்படியாவது உச்ச நடிகர் மற்றும் அந்த பிரம்மாண்ட இயக்குநர் படத்தை ஓகே செய்து விடலாம் என நினைத்த தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய பல்பு கொடுத்த நடிகர் இயக்குநரிடமும் தயாரிப்பு தரப்பில் சாரி சொல்லி விட்டாராம்.

அவரை விட்டால் இவர் தானே

அவரை விட்டால் இவர் தானே

உச்ச நடிகரை விட்டால் அடுத்த இடத்தில் இருப்பது இவர் தானே என இயக்குநர் ஒரே ஒரு போன் போட்டதுமே நீங்க சொன்னா உடனடியா பண்ணிடலாம் என பாஸ் நடிகர் சம்மதம் தெரிவித்ததும் கடகடவென்று அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் எனக் கூறுகின்றனர். கதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோம், உங்களுக்காக பண்ணுகிறேன் என்று சொன்ன உடனேயே இத்தனை ஆண்டுகளாக தப்பு பண்ணிட்டோமே என அந்த இயக்குநர் ரொம்பவே ஃபீல் பண்ணி விட்டாராம்.

பாவம் அந்த இயக்குநர்

பாவம் அந்த இயக்குநர்

பாஸ் நடிகரை அடுத்து நாம இயக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த டாப் நடிகர் படங்களை வரிசையாக இயக்கிய அந்த இயக்குநருக்கு கடைசி நேரத்தில் இந்த முறை வேண்டாம், அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்கிற மெசேஜ் வந்ததும் அப்செட் ஆகிவிட்டாராம். அடுத்த படத்திற்கு எந்த நடிகரை தேர்வு செய்வது என்பது என்ன கதையை உருவாக்குவது என ஏகப்பட்ட குழப்பத்தில் அந்த இயக்குநர் ஆழ்ந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *