தமிழ்ப் பேராய விருது 2023: சு.தமிழ்ச்செல்வி, சிவசங்கரி, விருது பெறுபவர்களின் முழுப் பட்டியல்!

அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்ப் பேராய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது “சிலாவம்’ என்ற நூலுக்கு ஆசிரியர் சு.தமிழ்ச்செல்விக்கு அளிக்கப்பட்டுள்ளது.  பாரதியார் கவிதை விருது ‘நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்’ என்ற நூலுக்காக ரவிசுப்ரமணியன் அவர்களுக்கும், அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது ‘பெரியார் தாத்தா’ என்ற நூலுக்காக அருண்.மோ அவர்களுக்கும், ‘கடலுக்கு அடியில் மர்மம்’ என்ற நூலுக்காக சி.சரிதா ஜோ அவர்களுக்கும்  பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.

ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது எம். பூபதி அவர்களுக்கும், ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருது ‘இதம் தரும் இதயம்’ என்ற நூலை எழுதிய டாக்டர் க. மகுடமுடி என்பவருக்கும்,  பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது ‘தனித்தமிழ் இயக்கம் ஒரு நூற்றாண்டு வரலாறு’ என்ற  நூலுக்காக க.தமிழ்மல்லன் அவர்களுக்கும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது ‘நிலத்தியல்பின் அரசியல்’ என்ற நூலுக்காக முனைவர் சிவ. இளங்கோ அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *