தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்து வர வேண்டும் : முதல்வர்

சென்னை
யில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின்
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.  சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில்  தமிழ்நாடு முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக இன்று (27.5.2023) ஒசாகாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில், ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரை  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  சந்தித்துப் பேசினார்.

விளம்பரம்

இந்த கலாச்சார சந்திப்பு நிகழ்வில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான 84 வயதான அகிமி சகுராய் அவர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

அதன்பின்னர் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் , ” ஏழு கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்துள்ளேன். இந்தியாவுக்கே பெருமையும் வளமும் சேர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் தொன்மையையும், பழமையையும், கீழடியும், பொருநையும் இன்று உலகுக்கே அடையாளம் காட்டி வருகிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சராக உங்களை இங்கு சந்திக்க வந்திருக்கிறேன்.

பெண்கள் அனைவருக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் – அனைத்து மாணவர்களையும் அனைத்து தகுதியும் கொண்டவர்களாக மாற்றும் ‘நான் முதல்வன் திட்டம்’ – பள்ளிகளில் மதிய சத்துணவோடு காலையிலும் உணவு என, குழந்தைகள் – மாணவர்கள் – இளைஞர்கள் – பெண்கள் ஆகிய அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்துக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி செயலாற்றி வருகிறது. எங்களின் இந்த திட்டங்களை இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன.

ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரின் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கலந்துகொண்டு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். 

இப்படிப்பட்ட நிலையில்தான், தொழில் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்காக வருகின்ற 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை மிகப் பெரிய அளவில் நடத்திட திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கு அழைப்பு விடுக்கத்தான், இந்த சுற்றுப்பயணம். நிசான், தோஷிபா, யமஹா, உள்ளிட்ட மிகப்பெரும் ஜப்பானிய நிறுவனங்கள், தங்கள் உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன.

இதற்கு முன்பு, மேயர்கள் மாநாட்டுக்கு 1997-ஆம் ஆண்டும், சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதற்கான மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு நிதி உதவி கேட்டு 2008-ஆம் ஆண்டும், நான் ஜப்பானுக்கு வந்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட ஜப்பான் நாட்டில் உள்ள முதலீட்டாளர்களிடம் தமிழ்நாட்டில் நிலவும் தொழில் தொடங்குவதற்கு ஏற்றச் சூழல், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை நீங்கள் எல்லாம் எடுத்துக் கூற வேண்டும். தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்து வர வேண்டும்” என்று அன்போடுக் கேட்டு கொண்டார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *