“தமிழகத்தில் யார் நம்பர் 1; தில் ராஜு பிரச்னையை உருவாக்குகிறார்” – திருப்பூர் சுப்ரமணியம் |tirupur subramaniam interview about varisu

இருவருமே சமமாக நடிக்கக்கூடிய முன்னணி நடிகர்கள். எங்களுக்குத் ‘துணிவு’தான் வேண்டும், ‘வாரிசு’தான் வேண்டும் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது. ரெட் ஜெயன்ட் புக்கிங் கொடுத்தால்தான், தங்களுக்கு எந்தப் படம் வேண்டும் என்பதை தியேட்டர் ஓனர்கள் முடிவு செய்வார்கள். அதற்குள்ளாகவே, எங்களுக்கு அதிக தியேட்டர்கள் வேண்டும் என்று கேட்டால், உடனே கொடுத்துவிடுவார்களா? அதேமாதிரி, விஜய்தான் நம்பர் 1 ஸ்டார் என்றும் தில்ராஜு கூறியுள்ளார். சினிமாவில் நம்பர் 1 ஸ்டார் கதைதான். படம் நன்றாக இருக்கவேண்டும். தொடர்ச்சியாக, அஜித், விஜய், கமல்ஹாசன் படங்கள் வந்தன. இவற்றுடன் ஒப்பிடும்போது, ​​’பொன்னியின் செல்வன்’ வசூலை வாரிக்குவித்தது. அப்போ, மிக முக்கியமான கதைதானே? கமல் நான்கு வருடங்களாக படமே நடிக்கவில்லை. ‘விக்ரம்’ வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்போ, விஜய், அஜித்தை விட கமல்தான் நம்பர் ஒன் நடிகர் என்று சொல்ல முடியுமா?

தில் ராஜு

தில் ராஜு

சினிமாவில் எந்தப் படம் நன்றாக உள்ளதோ, அதுதான் சூப்பர் ஹீரோ. பொதுமக்கள் நடிகர்களின் முகத்திற்காக தியேட்டருக்குச் செல்வது கிடையாது. படம் நல்லாருந்தால்தான் தியேட்டருக்கு வருவார்கள். அப்படி, பார்த்தால் ‘பீஸ்ட்’ படமே தோல்விதான். தில் ராஜு ஆந்திராவில் உட்கார்ந்துகொண்டு, ‘எனக்குதான் அதிக தியேட்டர் கொடுக்கணும். விஜய்தான் நம்பர் 1 ஹீரோ’ என்கிறார். யார் பெரிய ஸ்டார் என்பது எங்களுக்குத் தெரியாதா? எந்தக் கதை நல்லாருக்கோ அதுதான் பெரிய ஸ்டார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *