தனிப்பட்ட பகையை.. இண்டஸ்ட்ரி பகையா மாத்திட்டான்.. முன்னாள் காதலரை திட்டித் தீர்த்த கிரிஞ்ச் நடிகை! | Popular actress outburst after knowing about Industry ban rumours

திருமணத்துக்கு இல்லை

திருமணத்துக்கு இல்லை

பிரபல நடிகரின் படத்தில் அறிமுகமான அந்த நடிகைக்கும் நடிகருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கே சென்று விட்டனர். ஆனால், நடிகரின் சில கண்டிஷனுக்கு சம்மதம் இல்லாத நிலையில், நடிகை திடீரென அந்த திருமணத்தையே நிறுத்திவிட்டு தனது நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார்.

கடுப்பான காதலர்

கடுப்பான காதலர்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என நடிகையின் அதிரடி செயலால் ரொம்பவே கடுப்பாகி விட்டார் அந்த காதலர். அதன்பிறகு, நடிகரை மட்டுமில்லாமல் அவர் அறிமுகமான இண்டஸ்ட்ரியிலேயே படங்களில் நடிக்காமல் மற்ற சினிமா துறையில் பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில், நேஷனல் லெவலில் டாப் நடிகையாக மாறிவிட்டார்.

பழைய பகை

பழைய பகை

தென்னிந்திய நடிகைகளிலேயே குறைந்த ஆண்டுகளில் அதிக ரசிகர்களை அள்ளிய நடிகையாக மாறிய அவர் தற்போது தன்னை அறிமுகப்படுத்திய துறையை டோட்டலாகவே மறந்து விட்டார் என பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு சமயம் வந்த உடனேயே நடிகையை பழிவாங்கி விட்டார் அந்த நடிகர் என் எக்ஸ் மீது பயங்கர கடுப்பில் இருக்கிறார்.

திரண்ட திரையுலகம்

திரண்ட திரையுலகம்

சரியான நேரத்தில் அந்த முன்னாள் காதலர் பற்ற வைத்த தீ நடிகைக்கு எதிராக ஒட்டுமொத்த திரையுலகமே திரள வைத்துள்ளது. கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழலில் அப்செட்டான நடிகை எல்லாத்துக்கும் அவன் தான் காரணம் என உச்சகட்ட கோபம் அடைந்து திட்டி உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

திட்டித் தீர்த்த நடிகை

திட்டித் தீர்த்த நடிகை

சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு தயாரிப்பாளர் நேரடியாகவே இனிமேல் இந்த இண்டஸ்ட்ரியில் நடிக்க மாட்டீங்களா? ரொம்ப பிகு பண்றீங்களாமே என கேட்டதற்கு அதெல்லாம் இல்லைங்க என ஒட்டுமொத்த கதையையும் சொல்லி அவருக்கு முன்பாகவே எக்ஸை கடுமையாக திட்டி தீர்த்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

நோ ரெட் கார்டு

நோ ரெட் கார்டு

நடிகைக்கு ரெட் கார்டு கொடுத்து முடக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் தீவிரமாக எழுந்து வருவதாக கட்டுக் கதைகளையும் அந்த முன்னாள் காதலர் ஆட்கள் தான் சோஷியல் மீடியாவில் பரப்பி வருகிறார்கள் என்றும் எனக்கு ரெட் கார்டு எல்லாம் போட மாட்டாங்க, நான் எப்பவுமே எந்த இண்டஸ்ட்ரியையும் தப்பா சொல்ல மாட்டேன் அதுவும் சொந்த இண்டஸ்ட்ரியை எப்பவும் விட்டுட்டு தரவே மாட்டேன் என தனது தரப்பு நியாயத்தை எடுத்து வைத்து வருகிறாராம்.

பிசினஸ் தான் முக்கியம்

பிசினஸ் தான் முக்கியம்

தனிப்பட்ட பிரச்சனை காரணமாக நடிகையை அவ்வளவு சீக்கிரம் முடக்க முடியாது என்றும் அவருடைய பிசினஸ் இப்போது பீக்கில் இருக்கும் நிலையில், அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை தான் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு தடை செய்வதெல்லாம் முட்டாள்தனம் என்கிற பேச்சுக்களும் கிளம்பி வருகிறதாம்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *