தஞ்சை பெரிய கோயில் பிரதோஷம் முழு காணொளி இதோ.. 

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மூலவர் சன்னதிக்கும், கொடிமரத்துக்கும், முன்பு நந்தி மண்டபம் அமைந்துள்ளது.

புரட்டாசி 2ம் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் எழுந்தருளி இருக்கும் மஹா நந்தியம் பெருமானுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட விபூதி, மஞ்சள், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அருகம்புல், வில்வ இலை, பூக்களால் நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, பிரதோஷம் அன்று நந்தியம் பெருமானை வழிப்பட்டால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால் ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை வழிப்படடனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *