டிராக்டரில் மணல் அள்ள அனுமதி? – பொதுப்பணித்துறை அலுவலர்களை கண்டித்து லாரி உரிமையாளர்கள் போராட்டம்

இந்தநிலை தொடர்ந்தால் 12 சக்கரம், 14, 16 சக்கரம் கொண்ட லாரிகளில், லோடு ஆட்டோக்களில் யாரு வேண்டுமனாலும் மணல் அள்ளும் நிலை உருவாகும். இதனால், தமிழகத்தில் 55,000 லாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகும். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டிரைவர்கள் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 75 டிராக்டர்களுக்கு முறைகேடாக மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

பொதுப்பணித்துறை அலுவலர்களை கண்டித்து போராட்டம்
பொதுப்பணித்துறை அலுவலர்களை கண்டித்து போராட்டம்

முறையாக அரசாணைப்படி ஆன்லைனில் புக் செய்த லாரிகளுக்கு குறைந்த அளவில் தான் மணல் அள்ள அனுமதிக்கின்றனர். இதனால் லாரி உரிமையாளர்கள் லாரிகளை இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, டிராக்டர்களில் மணல் அள்ளுவதை அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் தலைவர் ராசாமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகளுடன் அதன் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்’ எனத் தெரிவித்தனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *