டிடிஎஃப் வாசனை காண வந்த ரசிகர்கள் விரட்டியடிப்பு! காவல்துறையின் ட்ரீட்மென்ட்

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தாமல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல யூடூப்பர்  டிடிஎஃப் வாசன் 45 நாள் சிறையில் இருந்த பிறகு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.உயர் நீதிமன்றம் ஜாமீன் பெற்ற நிலையில் நேற்று முன்தினம் சிறையில் இருந்து விடுதலையானார். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் காஞ்சிபுரம் பாலுக்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகி மூன்று வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் நிவாசன் முன்னிலையில் ஆஜர் ஆகி நீதிமன்ற உத்தரவு பிரதியை வழங்கி நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். தினமும் காலை 10:30 மணி அளவில் பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் நிபந்தனையே இன்று முதல் டிடிஎஃப் வாசன் தொடங்கினார். காவல் நிலையத்தில் ஆஜர் ஆகிவிட்டு வெளியே வந்த டிடிஎப் வாசனை சூழ்ந்து கொண்டு செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அப்போது, செஞ்சது போதும் அண்ணே, இப்ப கெஞ்சி வீங்க, அப்புறம் மிஞ்சிவீங்க, காலையிலிருந்து சாயந்தரம் வரைக்கும் நின்றோம்.பைட் கொடுங்க என்று கேட்டார்கள், சோ கொடுத்தோம். உங்களால முடிஞ்சத செஞ்சிட்டீங்க ரொம்ப நன்றி. அது உங்களுக்கு ஒண்ணுமே இல்ல நமக்கு தான் கஷ்டம் என தெரிவித்துவிட்டு காரில் ஏறி சென்று விட்டார்.

டிடிஎப் வாசன் காவல் நிலையம் வந்துள்ளதை அறிந்து கொண்ட இளம் ரசிகர்கள் ஏராளமானோர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதைத்தொடர்ந்து காரில் ஏற வந்த டிடிஎப் வாசனுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது, டிடிஎஃப் வாசனை காண வந்த அவரது ரசிகர்களை காவல்துறையினர் ஓடிச் சென்று விரட்டி அடித்தனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *