ஜனவரி மாத ராசி பலன் 2024 : புத்தாண்டில் கொட்டப்போகும் பண மழை.. அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும்?

சென்னை: 2024 ஆம் ஆண்டின் முதல் மாதம் ஜனவரி மாதம். ஜனவரி மாதத்தில் சூரியன், தனுசு ராசியிலும் மகர ராசியிலும் பயணம் செய்வார். கூடவே செவ்வாய், புதன் கிரகங்களும் பயணம் செய்வதால் புது வித யோகம் உருவாகிறது. நவகிரகங்களின் சஞ்சாரம் பார்வை, கூட்டணியைப் பொருத்து துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? அதிர்ஷ்டம் யார் வீட்டிற்கு தேடி வரும் என்று பார்க்கலாம்.

துலாம்: சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் செவ்வாயுடன் இருப்பதால் அரசாங்க ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும், வேலை காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். 15ஆம் தேதிக்கு மேல் நான்காமிடத்திற்குச் செல்வதால் வீட்டு வாடகை மூலம் பண வரவு உண்டாகும், அரசாங்க ஒதுக்கீட்டின் மூலம் வீடு நிலம் கிடைக்கும். பூர்வீக சொத்திலிருந்து பண வரவு கிடைக்கும், வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும், அக்கம்பக்கத்தாரால் நன்மை உண்டாகும். குருவின் பார்வையால் குதூகலம் உண்டாகும். வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும்.

விருச்சிகம்: சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் செவ்வாயுடன் சேர்ந்திருக்கிறார். அப்பா மூலம் பண வரவு உண்டாகும், வெளிநாட்டு தொழில் தொடர்புகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். 15ஆம் தேதிக்குப் பின்னர் சூரியன் மூன்றாமிடத்திற்கு வருவதால் அரசாங்க ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், செல்வ வளம் சிறப்படையும். சொந்த பந்தங்களுடன் கூடி இருப்பீர்கள். முகத்தில் பொலிவும் அழகும் கூடும்.

தனுசு: சூரியன் செவ்வாயுடன் இணைந்து உங்கள் ராசியில் பயணம் செய்வதால் கோபத்தை கட்டுப்படுத்தவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளினால் மன சங்கடம் உண்டாகும், திடீர் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். 15ஆம் தேதிக்குப் பின்னர் திடீர் பண வரவு உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் தொடர்புகள் லாபத்தைக் கொடுக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். பேசியே காரியம் சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்திற்காக செய்யும் செலவுகள் அதிகரிக்கும், வங்கிகளில் முதலீடு செய்வீர்கள். குரு பகவானின் பயணத்தால் பூர்வீக சொத்து விற்பனை மூலம் பண வருமானம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட தேவதையின் அருள் பூரணமாக நிறைந்திருக்கிறது. புத்தாண்டின் முதல் மாதத்தில் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள்.

மகரம்: சூரியன் செவ்வாயுடன் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வேலைக்காக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். 15ஆம் தேதிக்குப் பின்னர் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு வருவதால் உயர் அதிகாரிகளினால் மன சங்கடம் உண்டாகும், ஆன்மீக பயணங்கள் ஏற்படும். லாப சுக்கிரன் பண வருமானத்தை அதிகரிப்பார். நினைத்த காரியம் யாவும் எளிதில் நிறைவேறும், பணம் பல வழிகளில் இருந்தும் வரும். லாபம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கிறார் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானம் அவசியம்.

கும்பம்: சூரியன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் சொத்து சேர்க்கை அதிகரிக்கும். ஜனவரி 15ஆம் தேதிக்குப் பின்னர் சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்குச் செல்வதால் கவனம் தேவை. வெளிநாடு பயணம் ஏற்படும். வேலை காரணமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும் உங்கள் ராசிக்கு அதிபதியான சனி உங்கள் ராசியில் பயணம் செய்வதால் அகலக்கால் வைக்க வேண்டாம். தொழில் முதலீடுகளில் அதிக பண முதலீடுகளை தவிர்க்கவும். பத்தில் சுக்கிரன் பதவி யோகத்தை தரப்போகிறார். வேலையில் புரமோசன் கிடைக்கும்.

மீனம்: சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் செவ்வாயுடன் சேர்ந்திருக்கிறார். 7ஆம் தேதிக்கு மேல் புதனும் இணைகிறார். படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். 15ஆம் தேதிக்குப் பின்னர் சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு வருவதால் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும், பண வருமானம் அதிகரிக்கும். பத்தாமிடத்திற்கு வரப்போகும் புதன் பதவியில் உயர்வை தருவார். தொழில் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குரு இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் பண வருமானம் சரளமாக இருக்கும், குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். விரைய சனியால் திடீர் செலவுகள் வரும். உடல் உழைப்பு அதிகரிக்கும். ஜென்ம ராகு திடீர் அதிர்ஷ்டத்தை தேடி தரப்போகிறார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *