சௌ சௌ சட்னி

தேவையான பொருட்கள்:

சௌ சௌ காய் – 250 கிராம்
தக்காளி – 2
பூண்டு – 1 பல்
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி – 1 கையளவு
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சாம்பார் தூள் – 1/2 டீஸ்பூன்
புளி – 1 சிறிய துண்டு
கல் உப்பு – 3/4 டீஸ்பூன்
தண்ணீர் – 1/4 கப்

தாளிப்பதற்கு…

நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் சௌ சௌ காயின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அதேப் போல் தக்காளியையும் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சௌ சௌ காயைப் போட்டு, அத்துடன் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின் குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும், குக்கரைத் திறக்க வேண்டும்.பின் மத்து கொண்டு மசித்து சட்னியாக்க வேண்டும்.அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான சௌ சௌ சட்னி தயார்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *