செவ்வாய் கொட்ட போகிறார்.. யோகராசிகள் இவர்கள்தான்

செவ்வாய் பகவான் நல்ல பலன்களை கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இவர் தன்னம்பிக்கை, தைரியம், வீரம், விடாமுயற்சி என அனைத்து விஷயங்களுக்கும் காரணியாக விளங்கி வருகிறார்.

வரும் டிசம்பர் 27ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசிக்கு உள் நுழைகிறார். அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் அதுபோல செவ்வாய் பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய சுபதாக்கத்தை ஏற்படுத்த போகின்றது அது எந்தெந்த ராசிகள்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் ஒன்பதாவது வீட்டில் அமரப்போகின்றார். உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். அரசியலில் இருக்கக்கூடியவர்களுக்கு நல்ல மாற்றம் அமையும். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம் ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும். அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் பண வரவில் இருந்த குறையும் இருக்காது. உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

தனுசு ராசி

தனுசு ராசியில் செவ்வாய் பகவான் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிவர்த்தி அடையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ உள்ளது. நீதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *