சென்னையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு புரோ கபடி

சென்னை: புரோ கபடி போட்டியின் 10வது தொடர் இப்போது நடைபெற்று வருகிறது. அதில் சென்னை களத்துக்கான ஆட்டங்கள் இன்று முதல் டிச.27ம் தேதி வரை பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும். புரோ கபடி போட்டியில் பங்கேற்கும் 12 அணிகளும் குறைந்தது தலா ஒரு ஆட்டத்திலாவது சென்னைக் களத்தில் விளையாடும். அதே நேரத்தில் சென்னை அணியான தமிழ் தலைவாஸ் 4 ஆட்டங்களில் இங்கு களம் காண உள்ளது. தமிழ் தலைவாஸ் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி தலா 2 வெற்றி, தோல்விகளுடன் 10புள்ளிகளை பெற்றுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.

இனி சென்னையில் நடைபெறும் 4 ஆட்டங்களும் உள்ளூரில் நடக்கும் உற்சாகத்துடனும், உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடனும் வெற்றிகளை குவிக்க வாய்ப்பு உள்ளன. அதன் மூலம் தமிழ் தலைவாஸ் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காண முடியும், அதே நேரத்தில் புனேரி பல்தன், பெங்கால் வாரியர்ஸ், ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஆகிய அணிகள் தொடர்ந்து முதல் 4 இடங்களில் நீடிக்கிக்கின்றன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தமிழ் தலைவாஸ் அணியில் மட்டுமின்றி ஜெய்பூர், அரியானா, பெங்கால், மும்பை உட்பட பல்வேறு அணிகளில் தமிழக வீரர்கள் முக்கிய வீரர்களாக விளையாடி வருகின்றனர்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *