சென்னையில் பிரண்ட்ஸ் மற்றும் பெண்களாக சுற்றுலா செல்ல பெஸ்ட் ஐடியாஸ் இது தான்!

எந்தவொரு எதிர்மறையான எண்ணமும் இல்லாமல், செய்யும் உதவிக்கு பதில் எதிர்பாராமல், உற்ற நேரத்தில் தோளுக்கு தோளாய் நின்று, நம் சுகம், துக்கம், சந்தோஷம், வெற்றி, தோல்வி என நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நம் நெருங்கிய நண்பர்கள் தூண்களாய் நிற்கிறார்கள்! எப்பொழுதுமே நண்பர்களுடன் வெளியே செல்வது ஒரு அலாதியான இன்பத்தை தருகிறது. சென்னையில் நீங்கள் உங்கள் நண்பர்கள் கூட்டத்தினருடன் ஜாலியா வெளியே செல்வதற்கான பெஸ்ட் ஐடியாஸ் இதோ!

beaches

சென்னையின் கடற்கரைகள்

சென்னை இயற்கையான கண்கவர் காட்சிகளை வழங்கும் ஏராளமான கடற்கரைகளைக் கொண்டுள்ளது. குதிரை சவாரி, காத்தாடி விடுவது, பல வகை சுவையான உணவுகளை ருசிப்பது என பல அமசங்களைக் கொண்ட ஆசியாவின் மிக நீண்ட கடற்கரையான மரினா பீச், நவநாகரீக உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் நிறைந்த சுத்தமான கடற்கரையான எலியட்ஸ் பீச், நீச்சல் மற்றும் சர்ஃபிங்கிற்கு ஏற்ற கோவளம் கடற்கரை ஆகியவை உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் ஒரு சரியான தேர்வாக இருக்கும்.

மேலும், கூட்ட நெரிசல் இல்லாத அமைதியான சூழலில் அமைந்துள்ள ப்ரீஸி பீச், போட்டோஷூட்டிற்கு ஏற்ற பெப்பில் பீச், அழகான மகாபலிபுரம் பீச் ஆகியவற்றையும் நீங்கள் உங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

மால்கள் மற்றும் சினிமாக்கள்

ஒரே இடத்தில் அற்புதமான உணவகங்கள், பிராண்டட் ஷோரூம்கள் மற்றும் திரையரங்குகள் அனைத்தையும் பெறக்கூடிய ‘ஆல் இன் ஒன்’ விருப்பத்தை தான் மால்கள் நமக்கு வழங்குகின்றன. காலையில் நண்பர்களுடன் சென்றால், சினிமா, ஷாப்பிங், கேளிக்கை, உணவு என எல்லாவற்றிலும் குதுகலித்துவிட்டு இரவு தான் வெளியே வர முடியும். அந்த அளவிற்கு சென்னையில் சாய்ஸ் உண்டு.

இந்தியாவின் மூன்றாவது பெரிய பொழுதுபோக்கு வளாகமான வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மால், எக்ஸ்பிரஸ் அவென்யு, விஆர் மால், மரினா மால், ஃபோரம் மால், காற்றோட்டமான ஓபன் டிரைவ் – இன் தியேட்டரான பிரார்த்தனா, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய சினிமா பார்க் ஆன மாயாஜால் சினிமாஸ் ஆகியவை உங்களுக்கு ஒரு சரியான தேர்வாக இருக்கும்.

partyplaces1

சென்னையின் குதூகலமான பார்ட்டிகள்

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சேர்ந்து பார்ட்டிக்கு செல்வது யாருக்குத் தான் பிடிக்காது. சென்னையில் இரவு நேர வாழ்க்கை மிகவும் துடிப்பானது, வண்ணமயமானது.

சென்னையில் பிரதான நிலப்பரப்பில் உள்ள ஒரு ஆடம்பரமான பிரிட்டிஷ் பப் ஆன 10 டவுனிங் ஸ்ட்ரீட், நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பிரபலமான பாஷா, எப்போதுமே களைக்கட்டி இருக்கும் கேட்ஸ்பை 2000, பார்க் ஹயாட் இல் உள்ள தி ஃபிளையிங் எலிஃபென்ட், பார்க், பிளேன்ட், பே 146 ஆகியவை சென்னையின் முக்கிய பார்ட்டி இடங்களாகும்.

கேளிக்கை பூங்காக்கள்

கேளிக்கை பூங்கா என்ற பெயரைப் போலவே, இவை ஒரு பெரிய வளாகத்தில் அற்புதமான சவாரிகள், நீர் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைக் கொண்ட மெகா கேளிக்கை மையங்களாக திகழ்கின்றன.

எல்லாவற்றையும் மறந்து சாகச உணர்வில் திளைத்து நண்பர்களுடன் ஆனந்தாமாக இருக்க இப்பூங்காக்கள் ஒரு இனிய வாய்ப்பை வழங்குகின்றன.

எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்ட், குயின்ஸ்லாந்து, விஜிபி யுனிவர்சல் கிங்டம், விஜிபி ஸ்னோ கிங்டம், கிஷ்கிந்தா தீம் பார்க், வைல்ட் ட்ரைப் ராஞ்ச், டாஷ்-என்-ஸ்பிளாஸ் ஆகியவை முற்றிலும் உங்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

shoppingwithfriends1

அட்டகாசமான ஷாப்பிங்

கடற்கரைகள், கோவில்கள், பார்க், சினிமா என்று செல்வதை காட்டிலும் சில பேருக்கு ஷாப்பிங் செய்வது மிகவும் பிடிக்கும். சென்னையில் அதற்கும் இடமுண்டு! புதுவிதமான குர்திகள், ஷர்ட்ஸ், பேன்ட்ஸ், அணிகலன்கள், ஷூ, செருப்புகள், மொபைல் கேஸ், ஹேன்ட் பேக்ஸ், புடவைகள் என எல்லாவற்றையும் நாம் வாங்கி மகிழலலாம். இவை அனைத்தும் நாம் அசரக்கூடிய அளவிற்கு மலிவு விலையில் கிடைக்கின்றன.

பாண்டி பஜார், சவுகார்பேட்டை மார்கெட், ரிச்சி ஸ்ட்ரீட், தி.நகர், ஜார்ஜ்டவுன், பர்மா பஜார், காட்டன் ஸ்ட்ரீட், பனகல் பார்க், பாரிஸ் கார்னர் ஆகியவை நீங்கள் ஷாப்பிங்கிற்காக செல்ல வேண்டிய இடங்களாகும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *