செட்டிநாடு ஸ்டைல் வாழைப்பூ குழம்பு

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ – 1 கப்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
புளி பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து, அதை நறுக்காமல், அப்படியே மோரில் ஊற வைக்க வேண்டும்.பின்பு குக்கரை அடுப்பில் வைத்த, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி, மஞ்சள் தூள், சீரகத் தூள், மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். பிறகு வாழைப்பூவை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் கிளறி குறைவான தீயில் வைத்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மசாலா வாழைப்பூவுடன் ஒன்று சேரும் வரை பிரட்டி விட்டு, 1/2 கப் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து புளிச்சாற்றினை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும். இறுதியில் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, குறைவான தீயில் வைத்து குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் வாழைப்பூ குழம்பு தயார்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *