சீனாவுக்கு வாய்ப்பு இல்லை!

டி20 தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அதற்கான முக்கிய விளம்பரதாரரை பிசிசிஐ தேர்வு செய்ய உள்ளது. போட்டியை, கோப்பையை குறிப்பிடும் போது விளம்பர நிறுவனத்தின் பெயரையும் சேர்த்து சொல்வார்கள். வீரர்களின் சீருடைகளிலும் அந்த நிறுவனத்தின் பெயர் இடம் பெறும். எனவே, முக்கிய விளம்பரதாரராக சேர பெரு நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.

அதற்கான ஏலத்தில் பங்கேற்க பெரு நிறுவனங்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை பிசிசிஐ நிர்வாகம் விதித்துள்ளது. இதனால் சீன நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. பந்தயம், சூதாட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்க தடையில்லை. ஆனால் விளையாட்டு சீருடை தயாரிப்பு, கிரிப்டோ கரன்சி, மது தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. இதுவரை டிஎல்எப், பெப்சி, விவோ, டிரீம் 11, டாடா ஆகிய நிறுவனங்கள் முக்கிய விளம்பரதாரர்களாக இருந்துள்ளன. 17வது சீசன் ஸ்பான்சருக்கான அடிப்படை விலை ரூ.360 கோடி.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *