சித்திரை நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் அப்பாவுக்குக் கஷ்டம் வருமா? நட்சத்திர மாலை சொல்வது என்ன?

இந்த நட்சத்திரத்தில் பல நாயன்மார்களும் ஆழ்வார்களும் பிறந்திருக்கிறார்கள். ஆனால் இந்த நட்சத்திரம் குறித்தத் தவறான கண்ணோட்டம் சிலரிடம் உள்ளது. அது தவறு. எண்ணற்ற சிறப்புகளோடு திகழ்வது சித்திரை.

ஜோதிடம் - ஜாதகம்
ஜோதிடம் – ஜாதகம்

நட்சத்திர மாலை சொல்லும் தகவல்

பெயர் சூட்டுதல், பூ முடித்தல், அன்னதானம் செய்தல், கல்வி தொடங்குதல், புதிய ஆடை, ஆபரணங்கள் உடுத்துதல், புத்தகம் வெளியிடுதல், மூலிகை மருந்து செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள மிக உகந்த நட்சத்திரம் சித்திரை.

சித்திரை நட்சத்திரம் – அங்காரகனின் ஆதிக்கத்தில் இருக்கும் நட்சத்திரம் இது. இதில் முதல் இரண்டு பாதங்கள் சௌமிய கிரகமான புதனின் கன்னி ராசி யிலும் மூன்று, நான்காம் பாதங்கள் கல்யாண கிரகமான சுக்கிரனின் துலா ராசியிலும் வருகின்றன.

`இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியசாலியாகவும், தான தர்மம் செய்பவராகவும், பெற்றவர்களைப் பேணுபவராகவும், சொல்வதை அழுத்தந்திருத்தமாகச் சொல்பவராகவும், பொறுமையற்றவராகவும் இருப்பீர்கள்’ என்கிறது நட்சத்திரமாலை எனும் நூல்.

மேலும் பல ஜோதிட நூல்கள் சித்திரையில் பிறந்தவர்களின் குணாதிசயங்களைக் கீழ்க்காணும்படி விவரிக்கின்றன.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *