சனிபகவானின் அன்பிற்குரிய ராசிகள் இவர்களே!

சனிபகவானின் அன்பிற்குரிய ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் நீதி மானாக விளங்க கூடியவர் சனி பகவான். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களில் இவரும் ஒருவர்.

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மை மற்றும் தீமைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.

நவகிரகங்களின் இடமாற்றத்தால் பல ராசியினர் தீமைகளை சந்தித்து வருகின்றனர் அப்படி இருப்பினும் நவகிரகங்களுக்கு மிகவும் பிடித்த ராசிகள் என்ற ஒரு பட்டியல் உள்ளது. அந்த வகையில் சனிபகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ரிஷப ராசி

ரிஷப ராசியின் அதிபதியாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான் இவர் சனி பகவானுக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக எப்போதும் ரிஷப ராசிக்கு சனி பகவான் நாள் பெரிய தொந்தரவுகள் ஏதும் ஏற்படுவது கிடையாது என கூறப்படுகிறது. எப்படிப்பட்ட கஷ்ட காலமாக இருந்தாலும் பாதகமான சூழ்நிலைகளை பெரும்பான்மையாக கொடுக்க மாட்டார் சனி பகவான்.

கடக ராசி

சனிபகவானுக்கு மிகவும் பிடித்த ராசுகளின் நீங்களும் ஒருவர்.இந்த ராசிகளை ஒருபோதும் இவர் தொந்தரவு செய்வது கிடையாது. எத்தனை பெரிய சிக்கல்கள் வந்தாலும் அவர்களை காப்பாற்றுவதில் குறியாக இருப்பார். கடின உழைப்புக்கு எப்போதும் சனி பகவான் மேன்மையை கொடுப்பார்.

துலாம் ராசி

சனிபகவானின் அன்பிற்குரிய ராசிகளில் நீங்களும் ஒருவர் பல்வேறு விதமான மகிழ்ச்சிகள் சனி பகவான் உங்களுக்கு கொடுப்பார் என்பது ஆச்சரியம் தான். சனி பகவானின் அருளால் உச்ச நிலைக்கு செல்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

மகர ராசி

நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் தேவையில்லாமல் ஒருபோதும் தொந்தரவு செய்வது கிடையாது. அந்த வகையில் உங்களுக்கு எப்போதும் சனி பகவான் பெரிய தொந்தரவுகளை கொடுப்பது கிடையாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கடின உழைப்பு இருந்தால் சனிபகவான் நல்ல பலன்களை கொடுப்பார். எப்போதும் அவருடைய அன்பிற்குரிய ராசிகளில் நீங்களும் ஒருவர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *