கோலி விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சி: தென்ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா பேட்டி

செஞ்சூரியன்: இந்தியா -தென்ஆப்ரிக்கா இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 59 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கீடால் முதல் நாள் ஆட்டம்முடிவுக்கு வந்தது. 2வது நாளான இன்று கே.எல்.ராகுல், சிராஜ் பேட்டிங்கை தொடங்கினர். இதனிடையே நேற்று விராட் கோஹ்லி விக்கெட்டை வீழ்த்திய ரபாடா அளித்த பேட்டி: ”எங்கள் தாக்குதலில் இரண்டு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், நாங்கள் பொதுவாக பந்தை வலது கை வீரர்களுக்கு ஸ்விங் செய்ய முயற்சித்தோம், மேலும் பவுன்ஸ் மூலம் நெருக்கடி கொடுக்க முடியும் என தோன்றியது. லெக் ஸ்லிப்பையும் வைத்து பந்துவீசினோம். மதிய உணவு இடைவேளையின்போது கோஹ்லியின் பேட்டிங் வீடியோவை பார்த்து எங்கள் திட்டத்தை மாற்றி பந்துவீசினோம்.

அது கிட்டத்தட்ட விராட் கோலிக்கு வேலை செய்தது. அவர் ஒரு அற்புதமான வீரர். அவரின் விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எனது பயிற்சியில் கவனம் செலுத்தினேன். அதிலிருந்து நான் என்ன பெற விரும்புகிறேன் என்று எனக்குத் தெரியும். சில சமயங்களில் சரியான இடத்தில் பந்து வீசினாலும் வெற்றிகிடைக்காது.ஆனால் இன்று என்னுடைய நாள். நான் மிகவும் நம்பிக்கையுடன் போட்டிக்கு வந்தேன். கடின உழைப்பு, பலன் அளித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் இங்கு கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பிப்ரவரி மற்றும் மார்ச்சில் ஒரு டெஸ்டில் விளையாடினோம். அப்போது ரசிகர்கள் அதிகம் இல்லை. இதற்கு முன் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக இங்கு (டிசம்பர் 2021ல் லாக்டவுனின் போது)விளையாடினோம். அப்போது மைதானத்தில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்ைல.

தற்போது மீண்டும் இங்கு அதிக ரசிகர்கள் முன் ஆடுவது மிகவும் அருமையாக இருக்கிறது., என்றார். இந்திய அணியின்பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறுகையில்,கோஹ்லி அற்புதமாக ஆடினார். ரோகித்சர்மா புல் ஷாட்டில்நிறைய ரன்கள் எடுத்துள்ளார். அது அவருக்கு பிடித்தமான ஷாட். அதில் சிக்சர்கள் எளிதாக அடிப்பார். ஆனால் இன்று அவர் அந்த ஷாட்டில் ஆட்டமிழந்தது பற்றி கவலைவில்லை. வெளிநாடுகளில் அவர் டெஸ்ட்டில் சிறப்பாக ஆடாவிட்டாலும் அவர் சிறந்த வீரர். அவரை நாங்கள் ஆதரிக்கிறோம், என்றார்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *