கோலிவுட் பாடகர்கள் இணையும் சங்கீத உற்சவம் திருவிழா

சென்னை: கோலிவுட் பாடகர்கள் மற்றும் கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் ‘சென்னையில் சங்கீத உற்சவம் திருவிழா சீசன் 2’, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்சன் சென்டரில் நேற்று தொடங்கியது. ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இசைக் கலைஞர்கள் மஹதி, ராஜேஷ் வைத்யா, மாண்டலின் ராஜேஷ், ஜீ கே மீடியா நிர்வாக இயக்குநர், விநாயகா கேட்டரிங் நிர்வாக இயக்குநர் கலந்துகொண்டனர். இன்று மாலை திருச்சூர் சகோதரர்கள், 29-ல் ராஜேஷ் வைத்யா, 30-ம் தேதி விக்னேஷ் ஈஸ்வர், திருவாரூர் பக்தவச்சலம், 31-ம் தேதி பாடகி மஹதி, ஜன. 1-ல் ராகுல் தேஷ் பாண்டே மற்றும் சந்தீப் நாராயணன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த இசை நிகழ்ச்சி பற்றி மஹதி கூறும்போது, ‘பொதுவாகச் சென்னையில் சங்கீத கச்சேரிகள், மயிலாப்பூர், தி. நகர் போன்ற இடங்களில் மட்டுமே நடக்கின்றன. சென்னை மக்கள் பலரையும் கவரும் வகையில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கர்நாடக இசைக் கலைஞர்கள், திரையுலக பாடகர்கள் என பலரும் இணைவது மகிழ்ச்சி’ என்றார்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *