கொள்ளுப்பருப்பு சாதம்

தேவையானவை:

கொள்ளு – 2 கப்,
பாசுமதி அரிசி – 2 கப்,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 2,
பச்சை மிளகாய் – 5,
கறிவேப்பிலை, கொத்த
மல்லித்தழை – சிறிதளவு,
கடுகு – 1 ஸ்பூன்,
சீரகத்தூள் – 1 ஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு, நெய் – தேவையான அளவு.

செய்முறை:

கொள்ளுப்பருப்பை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கவும். அரிசியை உதிரியாக வேகவைத்து வடித்து ஆற வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, நெய்யை சேர்த்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும். உடன் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கவும். அதில் வேகவைத்த கொள்ளுப்பருப்பை சேர்த்து வதங்கியவுடன், ஆறிய சாதத்தை சேர்த்து கலக்கி, கொத்தமல்லித்தழைகளை தூவினால் சத்தான கொள்ளுப் பருப்பு சாதம் ரெடி.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *