கொத்து கொத்தாக இறங்கி வந்த மேகம்.. என்ன வியப்பு இது? சிலிர்த்த மக்கள்.. அடுத்த நொடியே நடந்த சம்பவம்

காத்மாண்டு: நேபாளத்தில் இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் நடந்த சம்பவம் ஒன்று அப்பகுதியில் வாழும் மக்களுக்கு இடையே வியப்பை ஏற்படுத்தியது.

பொதுவாக எவரெஸ்ட் சிகரம் அருகே வாழும் மக்கள் கடுமையாக இயற்கை சூழ்நிலையில் வாழ பழகிக்கொண்டவர்கள். மக்கள் பல ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் கடுமையான பனி, குளிர் ஆகியவற்றை எதிர்கொள்ளும் அளவிற்கு அனுபவம் கொண்டவர்கள்.

பனிச்சரிவு

பனிச்சரிவு

முக்கியமாக இந்த பகுதிகளில் அடிக்கடி பனிச்சரிவுகள் ஏற்படும். மேலே மலையில் இருந்து மொத்தமாக பனிகள் சரிந்து கீழே வரும். மக்கள் வசிக்கும் பகுதிக்கும் இந்த பனி அடிக்கடி வரும். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடிக்கடி பாதிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. சில சமயங்களில் பனிச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இங்கே பனிச்சரிவில் சிக்கினால் மரணம்தான். அவர்களை காப்பாற்றுவது என்பது கொஞ்சமும் இயலாத காரியம் ஆகிவிடும். அங்கே இப்படி பனிச்சரிவு ஏற்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

மேக சரிவு

மேக சரிவு

பனிச்சரிவு நாம் கேள்வி பட்டதுதான். மலை மீது பனி உடைந்து கீழே வந்தால் அது பனிச்சரிவு. ஆனால் மேக சரிவு கேள்வி பட்டு இருக்கிறதா? அதாவது மேலே இருக்கும் மேகம் அப்படியே கீழே இறங்கி வருவது. கீழே இறங்கி வந்து மக்கள் தரையை தொடுவதை பார்த்து இருக்கிறீர்களா? இதுதான் எவரெஸ்டில் நடந்து இருக்கிறது. ஆம் அங்கே பாறைகளுக்கு இடையே திடீரென மேகம் இறங்கி வந்துள்ளது. பெரிய மேக கூட்டம் கீழே இறங்கி வந்துள்ளது.

மேகம்

மேகம்

மொத்தமாக வானத்தில் இருக்கும் மேகம் அப்படியே இறங்கி வந்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் இங்கேயும் மேக கூட்டம் மொத்தமாக இறங்கி கீழே வந்துள்ளது. இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை லிங்க்ட்இனில் டாக்டர் சுப்பிரமணியன் நாராயணன் என்பவர் பகிர்ந்துள்ளார். அந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில் வானத்தில் இருந்து மேகம் அப்படியே கொத்தாக கீழே இறங்கி வருகிறது. மேஜிக் போல மேக கூட்டம் அப்படியே இறங்கி பூமிக்கு வருகிறது.

தரை

தரை

அதோடு இல்லாமல் மேக கூட்டம் மலைக்கு இடையில் உள்ள முகடுகளில் புகுந்து பின்னர் தரையைதொடுகிறது. தரையில் நதியை தொட்டுவிடும் மேக கூட்டம் அப்படியே சாரல் மழை போல மாறுகிறது. புயல் அடிக்கும் போது காற்றுடன் சாரலும் வரும் அல்லவா. அப்படித்தான் இதிலும் மோகத்துடன் பலத்த காற்றும், சாரல் மழையும் பெய்து உள்ளது. இந்த அதிசயத்தை பார்த்து வியந்தவர்களுக்கு அடுத்த நொடியே இன்னொரு அதிசயமும் நடந்து உள்ளது. இந்த மேக கூட்டம் நகர்ந்த அடுத்த நொடியே அங்கு மிகப்பெரிய அளவில் வானவில் ஒன்றும் தோன்றி உள்ளது. அப்படியே தரைக்கு மிக அருகே வானவில் ஒன்று தோன்றி உள்ளது. இந்த சம்பவமும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *