கே.எல்.ராகுல் அடித்த அரைசதம் சதத்திற்கு சமம்: சுனில் கவாஸ்கர் பாராட்டு

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டி: தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கே.எல்.ராகுல் அவர் அடித்த அரை சதம் சதத்திற்கு சமமாகும். இன்று அவர் சதமடிக்கிறாரா இல்லையா என்பது அவருடன் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்து அமையும். ஆனால் சதத்திற்கு அவர் தகுதியானவர். ஒருவேளை அதை அடிக்காமல் போனாலும் என்னை பொறுத்த வரை இந்த ரன்கள் சதத்திற்கு சமமாகும். முதல் பந்திலிருந்தே அவருடைய பேலன்ஸ் நன்றாக இருந்தது. குறிப்பாக அவருடைய தலை நேராக இருப்பதால் பந்தை எளிதாக விட முடிகிறது.

தன்னுடைய உயரத்தை பயன்படுத்தி அவரால் பவுன்சரை அடிக்க முடிகிறது. தம்முடைய பேலன்ஸை பயன்படுத்தி அவர் முன்னங்கால் மற்றும் பின்னங்காலில் விளையாடுவது அபாரமாக இருக்கிறது. அவருடைய திறமையை நாம் நீண்ட காலமாக அறிவோம். இருப்பினும் 8, 9 மாதங்கள் காயத்தால் அவர் தடுமாற்றமாக செயல்பட்டார். தற்போது வித்தியாசமான ராகுலை பார்க்கிறோம். இத்தனை நாட்களாக நாம் பார்க்க ஆசைப்பட்ட ராகுலை தற்போது பார்ப்பது அருமையாக உள்ளது, என்றார்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *