கேரளா:`அப்பாவ பீரங்கி எடுத்துட்டு வரச்சொல்லு!’- 4 வயது மகனின் ஆசையை நிறைவேற்றிய ராணுவ வீரர்! |story of an army man who designed a tanker in his house

ஆனால், அது உண்மையான பீரங்கி இல்லை, தனது வீட்டின் கிணற்றை அவ்வாறு அவர் வடிவமைத்துள்ளது அப்பகுதி மக்களுக்கு தாமதமாகத்தான் புரிந்தது. ராணுவத்தில் பணிபுரிந்துவரும் பிரவின் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் அவரது 4 வயது மகன் ஆதிதேவ் தனக்கு ஒரு ராணுவ பீரங்கி வேண்டும் எனக்கேட்டு அடம்பிடித்து வந்துள்ளார். மகனின் ஆசையை நிறைவேற்ற ஏதாவது செய்யும்படி அவனது தாய் சரண்யாவும் கூறிவந்திருக்கிறார். இதையடுத்து மகனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக தான் புதிதாகக் கட்டும் வீட்டுக்கு காஷ்மீர் என பெயரிட்டதுடன், வீட்டுக்கு முன் வெட்டிய கிணற்றை ராணுவ பீரங்கி வடிவில் அமைத்து அசத்தியிருக்கிறார் பிரவின். சிமென்ட்டில் கட்டப்பட்ட ராணுவ டேங்கர் பீரங்கிக்கு பெயிண்டிங் பணி முடிந்ததும் பார்ப்பதற்கு அசல் பீரங்கி போன்றே காட்சியளிக்கிறது.

பீரங்கி முன் அதை வடிவமைத்த சிலா சந்தோஷ்

பீரங்கி முன் அதை வடிவமைத்த சிலா சந்தோஷ்

சிமென்ட்டில் செய்யப்பட்ட ராணுவ பீரங்கியை பார்த்த சிறுவன் ஆதிதேவ் ஏன் இது நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது எனக்கேட்டுக்கொண்டே இருக்கிறானாம். இதுகுறித்து சிறுவனின் தாய் சரண்யா கூறுகையில், “எனது கணவர் 11 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்துவருகிறார். டி.வி-யில் ராணுவ டேங்கர் பீரங்கியை பார்த்த எனது மகன் ஆதிதேவ் ‘நம்ம ஆப்பாவும் மிலிட்டரியில்தானே இருக்கிறார், அவரிடம் ஒரு பீரங்கி கொண்டுவரச்சொல்லுங்கள்’ என கேட்டுக்கொண்டே இருந்தான். மகனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அடூரைச் சேர்ந்த சிலா சந்தோஷ் என்பவர் மூலம் எங்கள் வீட்டு முற்றத்தில் ராணுவ பீரங்கி உருவாக்க முடிவு செய்தோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *