குலசை தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியாவிலேயே கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தான் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழமத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் இந்த நவராத்திரியையொட்டி தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். 11 நாட்கள் நடைபெறும் திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. பின்னர் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து, வீதி வீதியாக சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள். விழாவின் சிகர நிகழ்வான அன்னை முத்தாரம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்வு அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும்.

அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளும் அம்மன், பல்வேறு உருவங்களில் வரும் மகிசாசூரனை வதம் செய்வார்.

அக்டோபர் 25ஆம் தேதி வரை தினமும் காலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற உள்ளன. கோயில் கலையரங்கத்தில் தினமும் மாலையில் திருமுறை, இன்னிசை, சமய சொற்பொழிவு ,கோலாட்டம், பரதநாட்டியம், மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் ,பக்தி வில்லிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

வருகிற 24-ஆம் தேதி சிரக நிகழ்வான மகிஷா சூரசம்காரம் நடைபெறுகிறது அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளும் அம்மன் பல்வேறு உருவங்களில் வரும் மகிஷாசுரனை வதம் செய்கிறார்.

அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலையில் கடற்கரை மேடை சிதம்பரேஸ்வரர் கோவில் எழுந்தருளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறுகிறது. இதையடுத்து காலை 6 மணிக்கு பூஞ்சபரத்தில் அம்மன் வீதி உலா வந்து மாலையில் கொடி இறக்கம் நடைபெறுகிறது. இதை எடுத்து பக்தர்கள் தங்கள் வேடங்களை கலைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *