குயிக் எனர்ஜி சுண்டல்

தேவையானவை:

பச்சைப் பயறு ½ கப்,
துருவிய நெல்லிக்காய் – 1 டீஸ்பூன்,
வெள்ளரிக்காய்,
தக்காளி,
பப்பாளி,
மாதுளை முத்துக்கள் – கொஞ்சம்,
துருவிய இஞ்சி – ½ டீஸ்பூன்,
மல்லி,
புதினா,
உப்பு,
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப.

செய்முறை:

ஊறவைத்து முளை கட்டிய பச்சை பயறை உப்பு சேர்த்து அரைவேக்காடு வேகவைத்து, அதனுடன் நெல்லிக்காய், மாதுளை, வெள்ளரி, தக்காளி, இஞ்சி, பப்பாளி, மல்லி, புதினா, மிளகாய் தூள் கலந்து குலுக்கினால் உடனடி குயிக் எனர்ஜி சுண்டல் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *