காஷ்மீர் ரஜோரியில் ராணுவத்தினர் மீது தீவிரவாத தாக்குதல்.. 4 வீரர்கள் வீரமரணம்.. பதிலடி பயங்கரமாகும்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது

காஷ்மீரின் பீர் பாஞ்சல் பள்ளத்தாக்கில் ரஜோரி பகுதி இருக்கிறது. இங்கு தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிமாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே கடந்த திங்கட்கிழமை முதல் ராணுவ வீரர்கள் இந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடத்து. இந்நிலையில் நேற்றிரவு, 2 ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த பயங்கர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 3 வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு ராணுவ வீரர் வீரமரணமடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. இந்த திடீர் தாக்குதலுக்கு ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டதாவது,

“நேற்று மதியம் 3.45 மணியளவில் இரண்டு இராணுவ வாகனங்கள், வீரர்களை ஏற்றிக்கொண்டு வந்துக்கொண்டிருந்தன. அப்போது தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு எதிராக உடனடியாக நமது வீரர்கள் பதில் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

4 ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்திருக்கிறார். “ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்தியாவைப் பாதுகாப்பதில் அவர்களின் உயர்ந்த தியாகத்தை நாடு எப்போதும் நினைவுகூரும்” என இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். ரஜோரி பகுதியில் கடந்த ஏப்ரல் – மே காலக்கட்டத்தில் மட்டும் இரண்டு பெரிய தாக்குதல்கள் நடந்தன. இதில் 10 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

கடந்த செப்.13 ஆம் தேதி அனந்தநாக் மாவட்டத்தில் தொடங்கிய தாக்குதல் 7 நாட்கள் நடைபெற்றது. இதில் மூன்று ராணுவ அதிகாரிகள் ஒரு காவல்துறை உயர் அதிகாரி என 4 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *