காலடி எடுத்து வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடியா இருக்கே.. இயக்குநரை நம்பி மோசம் போன நம்பர் நடிகை! | Director cheats Number Actress for giving a flop movie

கண்ணி வெடி

கண்ணி வெடி

எந்த அளவுக்கு பேரும் புகழும் இருக்கிறதோ அந்த அளவுக்கு பிரச்சனைகளையும் சினிமா பிரபலங்கள் சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். அதிலும், உச்சாணிக் கொம்பில் இருக்கும் அந்த நம்பர் நடிகைக்கு காலடி எடுத்து வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி வச்சது போல அடுத்தடுத்த பிரச்சனைகளும், சர்ச்சைகளும் வெடித்துக் கொண்டே இருக்கின்றன.

நடிப்புக்கு முழுக்கு

நடிப்புக்கு முழுக்கு

சமீபத்தில் திருமணத்தை நடிகை செய்து கொண்டு அவர் சினிமாவுக்கு முழுக்க போடப் போகிறார் என்கிற வதந்தி காட்டுத் தீ போல பரவியது. மேலும், தனது மைல் கல் படத்திற்காக இயக்குநர் ஒருவருடன் இணைந்த நிலையில், அந்த படத்தில் இருந்து அதிரடியாக விலகியது இந்த சர்ச்சையை காட்டுத் தீயாக கிளப்பியது.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

கொடுத்த பட்டத்தை பல ஆண்டுகளாக காப்பாற்றி வந்த நடிகையால் இந்த ஆண்டு அதை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வி அடைந்த நிலையில், சோகத்தின் உச்சிக்கே சென்ற நம்பர் நடிகை தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து விட்டதாகவும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

ரொம்ப எதிர்பார்ப்பு

ரொம்ப எதிர்பார்ப்பு

ட்ரோல்களுக்கு எல்லாம் இந்த படம் வரட்டும் சரியான பதிலடி கொடுத்து விடலாம் என ரொம்பவே நம்பிக்கையுடன் காத்திருந்த நம்பர் நடிகைக்கு கடைசியாக சமீபத்தில் வெளியான படமும் பெரிய பல்பை எடுத்து தலையில் மாட்டி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இயக்குநரை நம்பி மோசம்

இயக்குநரை நம்பி மோசம்

வேறு ஒரு நடிகருடன் நடிக்கவே ஆரம்பத்தில் அந்த இயக்குநர் படத்தில் கமிட் ஆனார் நம்பர் நடிகை. ஆனால், திடீரென அந்த படத்தை நிறுத்தி விட்டு, இன்னொரு படம் குறுகிய காலத்தில் சூப்பர் ஹிட் கொடுக்கிறேன் என நம்ப வைத்து நம்பர் நடிகையை மொத்தமாக மோசம் செய்த இயக்குநர்.

கடுப்பான நடிகை

கடுப்பான நடிகை

படத்தின் ரிசல்ட்டை பார்த்ததுமே இயக்குநர் மீது இருந்த கொஞ்ச மரியாதையும் நடிகைக்கு சுத்தமாக போய் விட்டதாம். இதற்கு முன் வெளியான பக்கத்து ஸ்டேட் படத்திலும் இயக்குநரை நம்பி கால்ஷீட் கொடுத்து ஏமாந்த நிலையில், இன்னொரு இயக்குநரும் நம் தலையில் மிளகாய் அரைத்து விட்டாரே என கணவர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என லேசாக அடி போட்டு வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அடுத்த படத்துக்கு சிக்கல்

அடுத்த படத்துக்கு சிக்கல்

நடிகையின் அடுத்தடுத்த படங்கள் மண்ணை கவ்வி வரும் நிலையில், அவர் நடிப்பில் அடுத்து உருவாகி உள்ள அந்த பேய் படத்தை வாங்க ஒருத்தரும் தயாராக இல்லை என்றும் ஓடியிருந்தால் வெளியிடுங்கள் என தியேட்டர் ஓனர்கள் திட்டவட்டமாக கூறி கோடம்பாக்கத்தில் செவி வழி செய்தி பரவி வருகிறது. v

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *