கார்த்திகை மாத ராசி பலன் 2023: விருச்சிகத்தில் கூட்டணி.. சூரிய பெயர்ச்சியால் பதவி உயர்வு யாருக்கு?

சென்னை: கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைகிறார். விருச்சிக ராசியில் புதன், செவ்வாய் சூரியன் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜ யோகங்கள் கிடைக்கப்போகிறது. துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கும் கார்த்திகை மாதத்தில் என்ன பலன் நடைபெறும் என்று பார்க்கலாம்.

துலாம்: சூரியன், செவ்வாய் புதன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தலைமைப் பதவி தேடி வரும். செய்யும் வேலைகளில் வருமானம் அதிகமாகக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்து பங்கு கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவதால் மாளவியா யோகம் தேடி வரும். முகத்தில் வசீகரம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களால் நன்மை உண்டாகும். எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். அதிர்ஷ்டகரமான மாதமாக அமைந்துள்ளது.

விருச்சிகம்: சூரியன்,செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் உங்கள் ஜென்ம ராசியில் கூட்டணி அமைத்து பயணம் செய்வதால் பதவி உயர்வு கிடைக்கும், உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். புது வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியடையும். சுக்கிரன் விரைய ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை.

தனுசு: சூரியன், செவ்வாய், புதன், ஆகிய மூன்று கிரங்கங்கள் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் அரசு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும் அதை சுப விரைய செலவாக மாற்றுங்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருவதால் பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். 12ஆம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும்.

மகரம்: சூரியன், புதன், செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். வங்கியில் சேமிப்பு கூடும். இளைய சகோதரர்கள் மூலம் பணவரவு கிடைக்கும். சுக்கிரன் ராசிக்கு பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்யப்போவதால் செய்யும் செயல்கள் சிறப்படையும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும், தொழிலில் கடும் உழைப்பு தேவைப்படும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.

கும்பம்: சூரியன், புதன், செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் பயணம் செய்கிறார். செய்யும் தொழில் உத்தியோகம் மேன்மையடையும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். சுக்கிரன் இந்த மாதம் சாதகமான இடத்தில் பயணம் செய்வதால் வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பழைய கடன்கள் வசூலாகும். மீனம்: சூரியன்,புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் கூட்டணி அமைத்து உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் பயணம் செய்வதால் அப்பாவினால் நன்மை உண்டாகும். பெண்களால் மனம் சங்கடப்படும் நிலை ஏற்படும் கவனமாக இருக்கவும். சனி விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *